மேலும் அறிய
எத்தனையோ திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கிறோம் ஓட்டு திருட்டை கேள்விப்பட்டதில்லை - கி.வீரமணி கிண்டல் !
அரசியல் சாசனம் காப்பாற்றப்பட வேண்டும். மனுதர்மம் வந்து விட்டால் நாம் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாது. - கி.வீரமணி எச்சரிக்கை.

கி.வீரமணி
Source : whatsapp
திமுக கூட்டணியை அசைக்க முடியாது - இது பதவி கூட்டணி அல்ல- கொள்கை கூட்டணி - காரைக்குடியில் கி. வீரமணி பேச்சு.
காரைக்குடியில் கி.வீரமணி பேச்சு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பெரியார் உலகம் நிதி அளிப்பு விழாவில் திராவிட கழகத் தலைவர் கே வீரமணி கலந்து கொண்டு பேசும்போது...,” நேரடியாக மக்களை சந்தித்து ஆதரவு பெற முடியவில்லை ஏன், என்றால் இது தமிழ் மண். கடவுள் வெறும் கல் தான் நாங்கள் மந்திரம் சொல்லி உயிர் கொடுத்துள்ளோம், அதனால் கடவுளின் தந்தை என்கின்றனர். இதை நீதிமன்றம் ஏற்காமல் தடை விதித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சியை அசைக்க நினைக்கிறார்கள் அது முடியவில்லை. ரோடு ஷோ , கடவுள் ஷோ நடத்துகிறார்கள் முடியவில்லை. அதனால் தான் 2024 தேர்தலில் 40 க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்று கூறினார். எத்தனையோ திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கிறோம் ஓட்டு திருட்டை கேள்விப்பட்டதில்லை. கொள்கை பலத்தோடு உள்ள திமுக கூட்டணியை அசைத்துப் பார்க்க நினைக்கின்றனர். அது அசைக்க முடியாது இது பதவி கூட்டணி அல்ல, இது கொள்கை கூட்டணி. அதனால் தான் கூட்டணிக்காக பலர் அலைகின்றனர்.
கி.வீரமணி எச்சரிக்கை
நேற்று கூட ஒருவர் வேறு கூட்டணிக்கு சென்றார் ( தமிழக வெற்றி கழகத்திற்கு) அவர் கும்கி யானை அவரை கும்கி யானை போல எங்கு வேண்டுமானாலும் அனுப்புவார்கள் என்று செங்கோட்டையனை மறைமுகமாக கிண்டல் செய்து பேசினார். அரசியல் சாசனம் காப்பாற்றப்பட வேண்டும். மனுதர்மம் வந்து விட்டால் நாம் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாது. பள்ளிக்கூடங்கள் மூடப்படும். மீண்டும் குலக்கல்வி திட்டம் செயல்பாட்டுக்கு வரும் இதை எதிர்க்கும் திமுக ஆட்சி மீண்டும் வருவதற்காக நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















