மேலும் அறிய

மதுரையில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: ஜெர்மனி அதிரடி வெற்றி! ஆட்டநாயகன் யார் தெரியுமா? #Hockey #Madurai #TamilNadu

போட்டியில் சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்த ஜெர்மனி வீரர் WARWEG JUSTUS ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

 ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடர் இன்று மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்யினான ஜெர்மனி அணி 4 புள்ளிகள் பெற்று தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது.

மதுரையில் துவங்கிய ஹாக்கிப் போட்டி

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான 14ஆவது சீசன் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ஹாக்கி மைதானத்தில் கோலகலமாக தொடங்கியது. இந்த உலக கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, 2 ஆம் இடத்தில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி, பி பிரிவில் சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முதன்முறையாக மதுரை ஹாக்கி மைதானத்தில் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான முதல் லீக் போட்டியானது நடப்பு சாம்பியனான ஜெர்மனி - தென் ஆப்ரிக்கா இடையே நடைபெற்றது. இப்போட்டியினை இந்திய ஹாக்கி இந்திய பொதுச்செயலாளர் போலோநாத் சிங் மற்றும் அமைச்சர் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் இரு அணி வீரர்களுக்கும் கை குலுக்கி போட்டியை தொடங்கி வைத்தனர்.
 
அயர்லாந்து - கனடா

இதில் 4 கால் சுற்றுகளாக நடைபெற்ற முதல் லீக் போட்டியில் முதல் கால் சுற்றில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி 4 புள்ளிகளுடன் (கோல்களுடன்) தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதில் 2 பீல்ட் கோல்களும், ஒரு பெனாலிட்டி கார்னர் மற்றும் ஒரு பெனாலிட்டி ஸ்ட்ரோக் என்ற முறையில் 2 கோல்கள் என 4 கோல்கள் அடித்தனர். தென் ஆப்ரிக்க அணி புள்ளிகள் இன்றி போட்டியில் தோல்வியடைந்தது. முதல் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்த ஜெர்மனி அணி வீரர் WARWEG JUSTUS ஆட்டநாயகன் விருதை பெற்றார். இவருக்கு அமைச்சர் மூர்த்தி ஆட்ட நாயகன் விருதை வழங்கினார். இதைத்தொடர்ந்து காலை 11.15 அயர்லாந்து - கனடா இடையே 2 ஆவது போட்டி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பலத்த சோதனைக்கு பின் அனுமதி

இதை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு ஸ்பெயின் - எகிப்து விளையாடி வருகிறது. மதியம் 3.45 பெல்ஜியம் - நமிபியா அணிகளுக்கான லீக் போட்டிளும் நடைபெறவுள்ளது. உலக கோப்பை ஹாக்கி தொடர் முதன் முறையாக இந்தியாவில் மதுரை சென்னை என இரு ஹாக்கி மைதானங்களில் நடைபெறுகின்றன. சென்னையில் 41, மதுரையில் 31 என மொத்தம் 72 போட்டிகள் நடைபெறவுள்ளது. மதுரை ரேஸ்கோர்ஸ் புதிய ஹாக்கி மைதானத்தில் புதிய செயற்கை டர்ப், ரசிகர்கள் அமர்வதற்கு புதிய மேற்கூரை, இரவு நேரப் போட்டிகளுக்காக நவீன விளக்குகள், வீரர்களுக்கான அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொந்தமண்ணில் களமிறங்கும் இந்திய அணியினர், சிறப்பாக செயல்பட்டு, 9 ஆண்டுக்குப் பின் கோப்பை வெற்றிபெறும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு போட்டியான ஹாக்கி போட்டியில் உலக கோப்பை லீக் போட்டியை காண ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும், இந்திய ஹாக்கி ரசிகர்கள் மற்றும் மதுரையை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணாக்கர்களும் போட்டியை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக் செய்த பார்வையாளர்கள் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உலக கோப்பை போட்டியில் விளையாட வருகைதரும் வீரர்கள், பார்வையாளர்கள், ஊடகத்தினர் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தலைப்பு செய்திகள்

America Vs Iran China: ட்ரம்ப் அறிவிப்பால் கோபமடைந்த சீனா.! ஈரானுக்கு ஆதரவாக என்ட்ரி; போரில் புதிய ட்விஸ்ட்
ட்ரம்ப் அறிவிப்பால் கோபமடைந்த சீனா.! ஈரானுக்கு ஆதரவாக என்ட்ரி; போரில் புதிய ட்விஸ்ட்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget