மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்

ரயில்களில் தினந்தோறும் பல கோடி மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் ஸ்லீப்பர் வகுப்பு ரயில் பயணிகளுக்கு புதிய திட்டத்தை தெற்கு ரயில்வே தொடங்கவுள்ளது.

ரயில் பயணிகளுக்கு சூப்பர் திட்டம்

பேருந்து, கார் என சொகுசாக பயணம் செய்தாலும் ரயிலில் பயணம் செய்வது போன்ற வசதி இருக்காது. அடிப்படை வசதிகளோடு பாதுகாப்பும் உள்ளதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கவே விரும்புவார்கள். அந்த வகையில் தினந்தோறும் பல கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே ரயில் பயணிகளுக்கு வசதிகளை அதிகரித்து கொடுக்கும் வகையில் புதிய, புதிய திட்டங்களையும் ரயில்வே நிர்வாகமும் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பெட் ஷீட் மற்றும் தலையணை வழங்கப்பட்டு வரும் நிலையில், வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் தூங்கும் வசதி கொண்ட ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டியில் முன்பதிவு செய்து பயணிக்கும் பெட் ஷீட் மற்றும் தலையணை வழங்கப்படவுள்ளது.

ஸ்லீப்பர் வசதி பெட்டி பயணிகளுக்கு புதிய திட்டம்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தூங்கும் வகை (Sleeper Class) பயணிகளுக்கான வசதி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய முன்னோடியான சேவையை அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேவில் முதல் முறையாக நன்கு சுத்தம் செய்யப்பட்ட படுக்கைப் பொருட்களான பெட்ஷீட் மற்றும் தலையணை வழங்கப்படவுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது. இந்த சேவையானது ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

AC வசதி இல்லாத ஸ்லீப்பர் பயணிகள், தங்களது பயணத்தின் போது தேவைப்பட்டால் கட்டண அடிப்படையில் சுத்தமான படுக்கைப் பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சேவையின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

• ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு வசதியை மேம்படுத்தவும்
• மலிவான கட்டணத்தில் உடனடி சேவை
• பயண அனுபவம் மேம்பாடு
• ரயில்வேக்கு கூடுதல் வருவாய்

முதல் கட்டமாக, சென்னையில் இருந்து புறப்படும்  10 ரயில்களில், 3 ஆண்டுகளுக்கு இச்சேவை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ₹28,27,653 வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

படுக்கைப் பொருட்களின் கட்டண விவரம்

படுக்கைத் துணி + தலையணை + தலையணை உறை பெறுவதற்கு 50 ரூபாய் கட்டணம்
தலையணை +  தலையணை உறை  30 ரூபாய் கட்டணம்
பெட் ஷீட் பெறுவதற்கு 20 ரூபாய் கட்டணம்

 

புதிய சேவை வழங்கப்படும் 10 ரயில்கள்

  • நீலகிரி எக்ஸ்பிரஸ்
  • மங்களூர் எக்ஸ்பிரஸ்
  •  மன்னார்குடி எக்ஸ்பிரஸ்
  • திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்
  • பாலக்காடு எக்ஸ்பிரஸ்
  • சிலம்பு எக்ஸ்பிரஸ்
  • தாம்பரம்–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
  • திருவானந்தபுரம் எக்ஸ்பிரஸ்
  • ஆலப்புழாவிற்கு எக்ஸ்பிரஸ்
  • மங்களூர் எக்ஸ்பிரஸ்

தலைப்பு செய்திகள்

Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (15-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (15-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
Chennai Traffic: வடசென்னை நெரிசல் குறையுமா? அதிரடியான 5 திட்டங்கள் - அடையாறு தொடங்கி வியாசர்பாடி வரை
வடசென்னை நெரிசல் குறையுமா? அதிரடியான 5 திட்டங்கள் - அடையாறு தொடங்கி வியாசர்பாடி வரை
Puducherry Diwali Gift: புதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 தீபாவளி மளிகைத் தொகுப்பு...!
Puducherry Diwali Gift: புதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 தீபாவளி மளிகைத் தொகுப்பு...!
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget