மேலும் அறிய

Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...

தவெக தலைவர் விஜய், 2026 தேர்தல் குறித்து ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பது, தற்போது அவரது தளபதிகளில் ஒருவராக திகழும் பிரஷாந்த் கிஷோர் மூலம் தெரியவந்துள்ளது.

சிங்கம் சிங்கிளாதான் வருது என்பதுபோல், 2026 தேர்தலை தமிழக வெற்றிக் கழகம் எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கிய தகவலை, பிரஷாந்த் கிஷோர் வெளியிட்டுள்ளார். அது என்ன முக்கிய தகவல்.? தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

தவெக கூட்டணி பேச்சு குறித்து வலம் வந்த செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், ஆரம்பத்திலேயே, தான் தனியாக தேர்தலை சந்திக்கப் போவதில்லை என்பதை, தவெகவின் முதல் மாநாட்டில் பேசியபோது சூசகமாக தெரிவித்தார். அது எப்படி என்றால், கூட்டணியில் உள்ளவர்களுக்கும் ஆட்சியில் பங்கு என்ற கூறியதுதான். அதனால், அப்போதிலிருந்தே கூட்டணிப் பேச்சுகள் குறித்த செய்திகள் வலம் வரத் தொடங்கிவிட்டன.

அதில் முக்கியமாக, அதிமுகவும், தவெகவும் கூட்டணி சேர்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்றும், தவெகவிற்கு 60 சீட்டுகளும், துணை முதலமைச்சர் பதவி வழங்குவதாகவும் அதிமுக தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், விஜய் தரப்பும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்றும் கூறப்பட்டது. இதனால், கூட்டணி பேச்சுகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதோடு, வேறு சில கட்சிகளும் தவெக உடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்பட்டது.

2026 தேர்தல் - விஜய் முடிவு குறித்து சொன்ன பிரஷாந்த் கிஷோர்

தேர்தல் கூட்டணி குறித்த தகவல்கள் ஒருபக்கம் வலம் வந்தாலும், மறுபக்கம் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கிய விஜய், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரை கட்சியில் இணைத்தார். அதோடு, மற்றொரு முக்கிய நகர்வாக, பிரஷாந்த் கிஷோரை வரவழைத்து, அவருடன் இணைந்து செயல்படுவதுதான். சமீபத்தில் நடந்த தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரஷாந்த் கிஷோர், தவெகவிற்கு தேர்தல் வியூகம் அமைக்க தான் வரவில்லை என்றும், விஜய் தமிழகத்தின் ஒரு புதிய நம்பிக்கை என்பதால் அவருடன் இணைந்திருப்பதாகவும் கூறி, பேசுபொருளாக மாறினார்.

தற்போது, தவெகவில் ஒரு தவிர்க்க முடியாத முக்கிய பிரமுகராக பிரஷாந்த் கிஷோர் மாறிவிட்ட நிலையில், அவர் கூறும் தகவல்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே பல தேர்தல்களின் முடிவை மாற்றிய அவர், தவெக உடன் இணைந்து பயணிப்பது, பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரஷாந்த் கிஷோர், 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனித்தே போட்டியிடும் என உறுதியாக கூறியுள்ளார். தவெக உடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்பினாலும், விஜய் தனித்து போட்டியிடுவதையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவு மாற வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தனித்து போட்டியிடும் தவெக, பெரும்பான்மையுடன் தேர்தலில் வெல்லும் எனவும் அவர் அடித்துக் கூறியுள்ளார்.

கூட்டணி பேச்சுக்கள் உண்மையில் நடைபெறுகிறதா இல்லையா என்று அனைவரும் குழம்பி இருந்த நிலையில், பிரஷாந்த் கிஷோரின் இந்த அறிவிப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கூட்டணி வைக்காத பட்சத்தில், சிதறும் ஓட்டுக்களை கட்சிகள் எவ்வாறு சமாளிக்கப்  போகின்றன என் கேள்வி எழுந்துள்ளது. மேலும், இது திமுகவிற்கு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதனால், விஜய்யின் முடிவு மாறுகிறதா, இல்லையா என்பது, தேர்தல் இன்னும் நெருங்கிவரும் சமயத்தில்தான் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"காவல்துறையின் அலட்சியமே காரணம்" - நெட்டூர் வன்கொடுமை சம்பவத்தால் கொதித்தெழுந்த பெ.சண்முகம்!
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget