Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
Anitha Radhakrishnan: அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு செய்து அர்ச்சகர்களை அவமதித்துவிட்டதாக, திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Anitha Radhakrishnan: அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு செய்து திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக, திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”அர்ச்சகர்களை இழிவுபடுத்திய அமைச்சர் ரமேஷ்”
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்து இந்துசமய அறநிலைய அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “ புகழ்பெற்ற அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சுவாமி தரிசனம் பெறுகின்றனர். வைகாசி விசாக திருவிழா நாளான இன்று சுவாமி தரிசனத்திற்காக விரதம் இருந்து காவடியேந்தி, பல நாட்கள் கால்நடையாக நடந்து வந்தும் சுவாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
அமைச்சரின் சாதியை குறிப்பிட்ட திமுக எம்.எல்.ஏ.,
இந்நிலையில் திடீர் ஆய்வு என்ற பெயரில் புதியதாக பொறுப்பேற்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஐய்யங்கார், காலங்காலமாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை சார்ந்த அர்ச்சர்களை இழிவுபடுத்தியது மிகவும் கண்டனத்திற்குறியதாகும். பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் திருக்கோயிலில் வேண்டுதலுடன் வருகின்ற பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதலும் உதவியும் திருசுதந்திர அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். பல வெளி ஊர்களிலும் வெளி மாநிலங்களிலும் பல்வேறு குடும்பங்களுக்கு கட்டளை ஐயர்களாக திருசுதந்திர அர்ச்சகர்கள் மரபுவழி பொறுப்பை நிறைவேற்றி வருகின்றனர்.
அறநிலையத் துறையை சார்ந்தவர் அல்லாத திருகதந்திர அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபுவழியாக இந்த சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர். பக்தர்கள் தரும் தட்சனையை பெறுகின்றனர். இந்த நிலையில் திருசுதந்திர அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மீக பணியை இழிவு படுத்தியுள்ளார் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஐய்யங்கார்.
அமைச்சருக்கு கண்டனம்
அறநிலையத் துறை அமைச்சரின் இந்த செயல் திருகதரிதிர அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மன வேதனையை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாதது சரியானதல்ல என்று ஊர் மக்கள் கருதுகின்றனர். திருச்செந்தூர் தொகுதி அனைத்து சமுதாய மக்களின் நலனை வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு 7-வது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பணி இருந்துவரும் நிலையில் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதோடு அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் புகழை சிறுமைப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஐயங்கார் அவர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்” என திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
புகார் மீது நடவடிக்கை எடுப்பது தவறா?
அனிதா ராதாகிருஷ்ணனின் அறிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, “திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே கோயிலில் அர்ச்சகர்கள் சட்டவிரோதமாக பணம் பறிப்பதாக பக்தர்கள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால், உங்களது ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது வந்தவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதை தவறு என சொல்வதோடு, துறைசார் அமைச்சர் கோயிலில் ஆய்வு செய்யக்கூடாது என நீங்கள் எப்படி சொல்லலாம்” என தவெகவினர் மட்டுமின்றி பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், அர்ச்சகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாக பேசும் நீங்கள் பக்தர்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் பறிப்பது குறித்து பேசாதது ஏன்? எனவும் வினவி வருகின்றனர்.
அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு பேசுவதா?
அமைச்சர் ரமேஷ் தான் எந்த சமூகத்தைச் சார்ந்தவன் என்பதை எங்கும் குறிப்பிட்டு பேசியதாக தெரியவில்லை. அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பெயருடன் சாதியை சேர்க்கவில்லை. அப்படி இருக்கையில் அவரை ரமேஷ் ஐய்யங்கார் என்று மீண்டும் மீண்டும் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது ஏன்? எனவும் அனிதா ராதாகிருஷ்ணனை நோக்கி கேள்வி எழுப்பும் தவெகவினர், உண்மையிலேயே சாதியை வைத்து அரசியல் செய்வது திமுகவினர் தான் என்பது உங்களது அறிக்கை மூலமே உறுதியாகியுள்ளது என குற்றம்சாட்டி வருகின்றனர். இந்துசமய அறநிலைய அமைச்சராக ரமேஷ் நியமிக்கப்பட்டது முதலே, சாதிய ரீதியாக அவருக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















