மேலும் அறிய

"காவல்துறையின் அலட்சியமே காரணம்" - நெட்டூர் வன்கொடுமை சம்பவத்தால் கொதித்தெழுந்த பெ.சண்முகம்!

தென்காசி மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்


தென்காசியில் பட்டியலின இளைஞர்கள் மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது என்றும் இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ(எம்)  பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டம், நெட்டூர் கிராமத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இத்தகைய வன்கொடுமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், மே 29 ம் தேதி திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமகனின் உறவினர்கள் சிலர் மே 28 அன்று இரவு 9 மணிக்கு மேல் மணமக்களை வாழ்த்தி ப்ளக்ஸ் பேனர் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் பிளெக்ஸ் அமைத்துக் கொண்டிருந்த இளைஞர்களோடு "இங்கே பிளெக்ஸ் போர்ட் வைக்கக் கூடாது” என்று தகராறு செய்திருக்கிறார். இதுகுறித்து ஆலங்குளம் காவல்துறைக்கும் தெரிந்திருக்கிறது.

இதே கிராமத்தில், கடந்த 5 மாதங்களில் பட்டியலின மக்கள் மீது சுமார் 8 வன்கொடுமைகள் நடந்துள்ளதாக அறியமுடிகிறது. இவைகள் அனைத்தும் ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தாலும், இதில் ஒரு பிரச்சனையில் கூட காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து முறையில் சமாதானம் பேசி அனுப்பிவைத்ததாகவும் மாதா கோவில் தெருவைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள். மே 28ம் தேதி நடைபெற்ற வன்கொடுமையிலும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாமல் வழக்கமான முறையில் சமாதானம் பேசி அப்போதைக்கு பிரச்சனையை முடித்துள்ளது.

இந்நிலையில், மே 29 ஆம் தேதி மாலையில் திருமண வீட்டில் உறவினர்களும் நண்பர்களும் மணவிழா விருந்தில் பங்கேற்பதற்காக கூடியிருந்துள்ளனர். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் 9 பேர் அடையாளம் தெரியாத படி துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் வெறிக்கூச்சல் போட்டவாறே வந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்கள் கூடியிருந்தவர்கள் மீது கண்மண் தெரியாமல் வெட்டரிவாளை வீசி கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ரமேஷ் (49) த/பெ ஞானமுத்து, சந்தோஷ் குமார் (21) த/பெ கணேசன், அருள்மாறன் (23) த/பெ ரமேஷ், ராயப்பன் (18) த/பெ காபிரியேல், ராம்குமார் (20) த/பெ சேகர் மற்றும் திருமண வீட்டில் மேளம் அடிப்பதற்காக வந்திருந்த மேளக் கலைஞர் மாடசாமி (19) த/பெ பரமசிவம் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் முதலில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், அதன் பிறகு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமண வீட்டில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாத சாதிய மனநிலை இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின்புலமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற சாதிய ஆதிக்க வன்கொடுமை தாக்குதல்களும், படுகொலைகளும், பட்டியலின மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாதிய கண்ணோட்டத்தோடு நடைபெறுகிற இத்தாக்குதல்கள் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், வழக்குகளை பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து ரீதியில் சமாதானமாகப் பேசி காவல் நிலையத்திலேயே முடித்து வைப்பதால்தான் இதுபோன்ற வன்கொடுமைகள் தொடர்ந்து பகிரங்கமாக நடைபெறுகின்றன.

எனவே, உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், வழக்குகளை பதிவு செய்யாமலும் மிக அலட்சியமாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும், உள்ளூரில் இவர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் மீதும் எஸ்.சி. / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டித்திட வேண்டுமெனவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான தீருதவியை வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கும் சட்டரீதியான பாதுகாப்புக்கும் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.


திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அதேபோல், தென்காசி மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி உள்ளிட்டோர் நெட்டூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நீதி கிடைக்கும் போராட்டத்தில் தாங்கள் துணை நிற்போம் என்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதியளித்துள்ளனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பொருளாதார உரிமை.. அக விலைப்படி நிலுவை; அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்கக் கோரிக்கை!
பொருளாதார உரிமை.. அக விலைப்படி நிலுவை; அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்கக் கோரிக்கை!
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
’’மகள் ஓடிப்போக நீதா காரணம்’’ ஆத்திரத்தில் மூக்கை கடித்து துப்பிய மாப்பிள்ளையின் நண்பர்
’’மகள் ஓடிப்போக நீதா காரணம்’’ ஆத்திரத்தில் மூக்கை கடித்து துப்பிய மாப்பிள்ளையின் நண்பர்
Thiruparankundaram: திருப்பரங்குன்றம் விவகாரம்; நிர்மல்குமாரின் பேட்டி மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது - தமிழிசை விமர்சனம்
Thiruparankundaram: திருப்பரங்குன்றம் விவகாரம்; நிர்மல்குமாரின் பேட்டி மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது - தமிழிசை விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Embed widget