மேலும் அறிய

”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்

ADMK On CM Vijay: தமிழ்நாட்டையும், உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களின் பாதுகாப்பையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் என முதலமைச்சர் விஜயை அதிமுக சாடியுள்ளது.

ADMK On CM Vijay: முதலமைச்சர் விஜயை திமுக பாணியிலேயே விமர்சிக்க அதிமுக முடிவு செய்துள்ளதை சமூக வலைதள பதிவுகள் மூலம் உணர முடிகிறது.

கடுமையாக சாடும் அதிமுக

சட்ட ஒழுங்கு பிரச்னைகளை குறிப்பிட்டு, முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து அதிமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், மதுராந்தகம் அருகே  75 வயது மூதாட்டியை கழுத்தில் இருந்த நகையை பறித்து - கீழே தள்ளி தலையை கல்லில் மோத வைத்து கொலை செய்த தவெக நிர்வாகி. வடலூர் அருகே முகம் சிதைந்த நிலையில் 25 வயது இளம்பெண் முகம் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுப்பு. ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த நபர்கள் 6 இளைஞர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம். நெல்லை - தெற்குப்பட்டியில் சாலையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல்.

”PR பில்டப்-லாம் போதும் சிஎம் சார்”

பொய்க்கால் குதிரை அரசே, இதுக்கு பேர்தான் நீங்க சொன்ன அந்த மாற்றமா? மாற்றம், புதிய அரசியல் அப்டின்னு பக்கம் பக்கமா வசனத்தை, பேப்பரை பார்த்து மனப்பாடம் செஞ்சு ஒப்பிச்சு ஆட்சியை பிடிச்ச இந்த பொய்க்கால் குதிரை அரசின் முதல்வருக்கு சட்டம் ஒழுங்கு அப்டினா என்னனாச்சும் தெரியுமா? குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ துளிகூட பயமில்லை! ஆனா நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு ஒண்ணுமே பண்ணாம Silent mode-ல வாய்மூடி மௌனியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு. வெறும் PR பில்டப்களால் மட்டும் ஒரு மாநிலத்தை ஆள முடியாது என்பதை இந்த பொய்க்கால் குதிரை அரசு உணர வேண்டிய நேரம் இது.PR பில்டப்-லாம் போதும், முதல்ல தமிழ்நாட்டையும், உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க” என அதிமுக சாடியுள்ளது. 

திமுக பாணியில் அதிமுக

மேற்குறிப்பிடப்பட்ட பதிவினை முதலமைச்சரின் ட்விட்டர் கணக்கிற்கோ அல்லது தவெகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கோ டேக் செய்யாமல், நேரடியாக நடிகர் விஜய் என்ற ட்விட்டர் கணக்கிற்கு அதிமுக ஐடி விங் டேக் செய்துள்ளது. முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் ஆகியோரும் விஜயை கண்டிக்கும்போது முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை தவிர்த்து, நடிகராக இருக்கும்போது விஜய் பயன்படுத்திய ட்விட்டர் கணக்குகளை டேக் செய்கின்றனர். இதன் மூலம், இன்னும் அவர் ஒரு நடிகர் மட்டுமே என மறைமுகமாக உணர்த்துவதை திமுக மற்றும் அதிமுக விரும்புவதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்: Honda Upcoming Cars: புதுசுலாம் செட் ஆகாது..! 3 லெஜண்டரி கார் மாடல்கள், ஹைப்ரிட் ஆக ரீலாஞ்ச்.. ஹோண்டா அதிரடி

தவெகவினர் பதிலடி

மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை குறிப்பிட்டு, தவெகவினர் பதிலடி தந்து வருகின்றனர். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் பேசி வருகின்றனர். அதேநேரம், முன்னதாக விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்க கூட்டணி அமைக்க முயன்று தோல்வியுற்ற திராவிட கழகங்கள். தற்போது அரசை விமர்சிப்பதற்காக கூட்டணி அமைத்துள்ளன என சாடி வருகின்றனர். விஜயை வெறும் நடிகராக சிறுமைப்படுத்தி தேர்தலை எதிர்கொண்டதன் காரணமாகவே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுமே தோல்வி கண்டன. அதிலிருந்தும் பாடம் கற்காமல் தற்போதும் விஜய் நடிகராக இருக்கும்போது பயன்படுத்திய ட்விட்டர் கணக்கை டேக் செய்து கேள்வி எழுப்புவதன் மூலம், தங்களது அகங்கார மனநிலையில் இருந்து இரண்டு கட்சிகளுமே கீழே இறங்கிவில்லை என்பதையே காட்டுகிறது என தவெகவினர் விமர்சித்து வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"அரைகுறை நிர்வாகம் நடத்துகிறது தமிழக அரசு" – செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்...
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
​
​"என் வீட்டிற்கு வந்த விஜய் என்னிடம் சொன்ன ரகசியம்!" – மேடையில் போட்டுடைத்த அன்புமணி ராமதாஸ்!
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
Embed widget