CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஃபேஸ் ஐடி எனப்படும் முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம் என்று அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத் துறை அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஃபேஸ் ஐடி எனப்படும் முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம் என்று அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மனித வள மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து அரசு உயர் அதிகாரிளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
’’தமிழக அரசின் மனித வள மேலாண்மைத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் அல்லது ஃபேஸ் ஐடி மூலம் வருகை பதிவேட்டு முறை வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். தினந்தோறும் காலை 10 மணிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
அடையாள அட்டையும் கட்டாயம்
அவர்கள் வருகையை பயோ மெட்ரிக்கில் ஃபேஸ் ஐடி மூலமும், கையெழுத்துப் பதிவேடு மூலமும் பதிவு செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த முறையை பின்பற்ற வேண்டும். அதேபோல் வேலை நேரத்தின்போது அதிகாரிகளும் ஊழியர்களும் எப்போதும் அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்’’.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பயோமெட்ரிக் முறை தமிழ்நாடு அரசிடம் அமலில் இருந்தபோதும் கொரோனா காலத்தில் சமூக இடைவெளி, பாதுகாப்பைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுமா?
முதல்கட்டமாக தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத் துறை அரசு ஊழியர்களுக்கு ஃபேஸ் ஐடி கட்டாயம் ஆக்கப்பட உள்ள நிலையில் பிற துறைகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















