மேலும் அறிய

CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?

CM Vijay TN Govt: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை, பட்ஜெட் என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

CM Vijay TN Govt: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, வரும் ஜுலை மாதத்தில் தனது முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்ட உள்ளதாம்.

வேகமெடுக்கும் தமிழ்நாடு அரசு:

சட்டமன்ற தேர்தல் முடிவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதற்கட்டமாக நிர்வாக ரீதியாக பல்வேறு ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடர்பான பல்வேறு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளது. அதற்கான முதல் முயற்சியாக சட்டப்பேரவை கூட்டப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசின் நிதிநிலை எப்படி உள்ளது என்பதை பொதுமக்கள் அறியும் வகையில் வெள்ளை அறிக்கையையும் முழு வேகத்தில் தயார்படுத்தப்பட்டு வருகிறதாம். 

இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை..

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளன்றே, மாநிலத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என விஜய் அறிவித்தார். இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்கள் எவ்வளவு கடன்சுமையை உயர்த்திவிட்டு சென்றனர், எதற்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்ற விவரங்களை மக்கள் அறிய வேண்டும் என கூறினார். இதுதொடர்பாக நேற்று சென்னையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “வெள்ளை அறிக்கை வேகமாக தயாராகி வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என அறிவித்தார். அதாவது நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே வெள்ளை அறிக்கை வெளியாக உள்ளது உறுதியாகியுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடர் எப்போது?

மாநிலத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபின் நடைபெற உள்ள முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இதில் ஆளுநர் முதலில் உரை நிகழ்த்த உள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். இந்த ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே நிலவுகிறது.

தயாராகும் பட்ஜெட்.. எகிறும் எதிர்பார்ப்புகள்..

ஆளுநர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட் அதாவது முதலமைச்சர் விஜய் தலைமையிலான முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் மகளிருக்கான ரூ.2,500, தாய்மாமன் சீர், தாலிக்கு தங்கம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் என தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அதன் முடிவில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பதில் உரை வழங்குவார். தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 துறைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பதோடு,  துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"அரைகுறை நிர்வாகம் நடத்துகிறது தமிழக அரசு" – செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்...
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
​
​"என் வீட்டிற்கு வந்த விஜய் என்னிடம் சொன்ன ரகசியம்!" – மேடையில் போட்டுடைத்த அன்புமணி ராமதாஸ்!
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget