மேலும் அறிய

அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி

பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் மஜக இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை பொதுக்குழு கூட்டம் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மனிதநேய ஜனநாயக கட்சி 9ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினோம். சோதனைகளை எல்லாம் சாதனையாக்கி அதிகார மையங்கள் நோக்கிய வெற்றிப்பயணம் தொடங்கும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். வரும் 2024 லோக்சபா தேர்தலில் கட்சி எத்தகைய நிலைபாடு எடுக்க வேண்டுமென்று தீர்மானத்தை தலைமை நிர்வாகக்குழுவிற்கு அதிகாரம் வழங்குவதென்றும், அரசியல் சூழலை கொண்டு தலைமை நிர்வாகக்குழு முடிவெடுக்க பொதுக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Kalaignar Pen Award: 2022ன் கலைஞர் எழுதுகோல் விருது.. மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு அறிவிப்பு

அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி

இன்றைய சூழலில் எந்த கட்சியிலும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. தலைமை நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறும் அதில் எங்களுக்கான வாய்ப்பு என்ன என்பதை பற்றி ஆய்வு செய்து முடிவை அறிவிப்போம். இந்தியாவின் அரசியல் மரபுகளை நாசம் செய்யும் பாஜக இருக்கும் கூட்டணியில் நிச்சயம் இடம் பெறமாட்டோம். தமிழகத்தில் நான்காவதாக வரக்கூடிய ஒரு அணிதான், பாஜக. அய்யா மூப்பனார் பின்பற்றிய மதசார்பின்மைக்கு எதிரான செயல்பாட்டில் ஜி.கே.வாசன் ஈடுபடுகிறார். அவரது கட்சியை அழிவுபாதைக்கு அழைத்து செல்கிறார். மதில்மேல் பூனைபோன்று இருக்கக்கூடிய மக்களை இழுக்கும் வகையில் இருக்கும் மக்களை மனசஞ்சலத்தை  இழுக்கும் வகையில் தந்திரபுத்தியாக 400 தொகுதியில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று பாஜக கூறுகின்றனர். 

MP Kanimozhi Karunanidhi: ’எங்கள் பெயரை சொல்ல மனமில்லை; அவர்களுக்குத் தெரிந்த நாகரீகம் அவ்வளவுதான் - கனிமொழி எம்.பி.,

அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி

இவிஎம் மிஷினில் ஒப்புகை சீட்டை கண்டிப்பாக வழங்க வேண்டும். ஒப்புகை சீட்டை சரிபார்ப்பதன் மூலமாக தேர்தல் முடிவை வெளியிட வேண்டும். பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் ஓட்டுமிஷின் மீது அய்யப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரதமர் தன்னுடைய தந்திரவிளையாட்டை நகர்த்துகிறார். அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திமுக, அதிமுக மாறிமாறி ஆட்சியில் இருந்ததால்தான் இந்தியாவில் தமிழகம் முதன்மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ரயில்வேத்துறைக்கு தனியாக பட்ஜெட் போடப்பட்டதை பாஜக அரசு நிறுத்தியது. வந்தேபாரத் என்ற பெயரில் ரயில்வேக்கு அமைச்சர் இருக்கிறாரா என்று தெரியாத அளவிற்கு பிரதமர்தான் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரயில்வேத்துறையில் ஏற்பட்டுள்ள அசௌரியங்களை மனதில்வைத்து லோக்சபா தேர்தலில் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள். 

Himachal Pradesh: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சுக்விந்தர் சிங் சுக்கு? உண்மை நிலவரம் என்ன?

அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி

மக்கள் தொகை அதிகரித்துவிட்ட நிலையில் 6 சட்டமன்றத்திற்கு ஒரு எம்பி என்பது தொடர்ச்சியாக சுத்திவருவது சாத்தியமில்லாதது. 3 சட்டமன்றத்திற்கு ஒரு எம்பி என்று கொண்டுவந்தால் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க வேண்டும். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தொகுதிக்கே ஏதாவது எம்பி வராமல் இருந்தால் மக்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல காட்சிகள் மாறலாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இரண்டு திராவிடக்கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தனர். பாஜகவில் இருந்த வெளிவரும்போது நாங்கள் வரவேற்றிருக்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

Mayuranathar Temple: சிவபெருமானும், பார்வதி தேவியும் மயில் உருவம் எடுத்த மாயூரநாதர் கோயிலின் சிறப்பும், வரலாறும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Embed widget