MP Kanimozhi Karunanidhi: ’எங்கள் பெயரை சொல்ல மனமில்லை; அவர்களுக்குத் தெரிந்த நாகரீகம் அவ்வளவுதான் - கனிமொழி எம்.பி.,
MP Kanimozhi Karunanidhi: அரசு விழாவில் எம்.பி. கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரது பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”எங்கள் பெயரை சொல்ல மனமில்லை; அவர்களுக்குத் தெரிந்த நாகரீகம் அவ்வளவுதான்.” என பிரதமர் நரேந்திர மோடி அரசு விழாவில் பெயரை தவிர்த்தது தொடர்பான கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட பலவேறு திட்டங்களுக்கான அரசு விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோரது பெயரை குறிப்பிடவில்லை. அரசு நிகழ்வில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களை சொல்லாமல் தவிர்த்தது இதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கனிமொழியிடம் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,” எங்கள் பெயரை சொல்ல மனமில்லை; அவர்களுக்குத் தெரிந்த நாகரீகம் அவ்வளவுதான். அது குறித்த கவலையில்லை.” என்று பதிலளித்தார்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திட வேண்டும் என்ற கலைஞரின் கனவு நனவாகியுள்ளது. ”என்று பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க.-வை நோக்கி வர தொடங்கியிருக்காங்க, பா.ஜ.க-வின் சித்தாந்தம் தமிழ்நாடு மக்களுடன் ஒத்துப்போகிறது என்று பிரதமர் மோடி பேசியிருப்பது தொடர்பாக பதிலளித்த கனிமொழி, “ எனக்குத் தெரிந்து நிச்சயமாக இல்லை. பா.ஜ.கா. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. பெரும்பான்மை மக்களை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். இதைப் புரிந்துகொண்டவர்கள் தமிழ்நாடு மக்கள். அரசியல் வேறு; மதம் வேறு. என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்” என்று தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் விவாதத்தில் நாடாளுமன்றத்தில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தது தொடர்பாக பதிலளித்த கனிமொழி,” அயோத்தி கோயில் கட்டுவதை பற்றி யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை; அதை ஒரு டிரஸ்ட் கட்டினாங்க.அதை அராசாங்கத்தின் சாதனையாக எப்படி சொல்ல முடியும்? வெளிநடப்பு என்பது கோயிலுக்கு எதிரானது அல்ல; இவங்க பேச கூடிய பல விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரித்தோம். அது ஒரு விசயத்தை எடுத்துகொண்டு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.” என்று தெரிவித்தார்.