KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL Auction 2026: வெங்கடேஷ் அய்யரின் (Venkatesh Iyer) அணுகுமுறை சரியில்லை என, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.

KKR IPL Auction 2026: கொல்கத்தா அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வெங்கடேஷ் அய்யர், மினி ஏலத்தில் ரூ.2 கோடி பிரிவில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்?
கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் போது பெரும் தொகைக்கு கொல்கத்தா அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர், இந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு விடுவிக்கப்பட்டார். கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாததால் விடுவித்து, மினி ஏலத்தில் குறைந்த விலைக்கு மீண்டும் அவரை அணியில் இணைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டதாக கருதப்டுகிறது. இந்நிலையில் தான், வெங்கடேஷ் அய்யரை கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம்செய்தது எப்படி? என்பதை அந்த அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக்நாயர் தெரிவித்துள்ளார். அதன்படி, ”சோதனைகளின் போது ஐயர் அடித்த ரன்களை காட்டிலும் அவரது அணுகுமுறையே (Attitude) அதிகமாகத் தெரிந்தது என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இணைந்தது எப்படி?
டிடி ஸ்போர்ட்ஸின் தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஷோவில் அபிஷேக், “வெங்கடேஷ் அய்யரின் அணுகுமுறைக்காகவே நான் அவரைத் தேர்ந்தெடுத்தேன். அணிக்கான சோதனையின் போது முதல் நாளில், வெங்கடேஷ் ஐயர் பெருமையுடன் உள்ளே நுழைந்தார். அவர் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் அவர் ஒருபோதும் எங்களைப் பார்க்கவில்லை அல்லது யாரையும் மகிழ்விக்க முயற்சிக்கவில்லை. அவர் மிகுந்த அணுகுமுறை கொண்டவர் என்று நான் நினைத்தேன்
இரண்டாம் நாளில்,நாங்கள் அவருக்கு ஒரு ஆட்டத்தைக் கொடுத்தோம். இறுதி ஓவரில், எங்கள் பந்து வீச்சாளர் தடுமாறியபோது, வெங்கி பவுண்டரியிலிருந்து, நான் கடைசி ஓவரை வீசுவேன் என்று கத்தினார். அவர் பந்து வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்தார், ஆனாலும் கடினமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் அவரது குணம் எனக்கு பிடித்தது. சோதனையில் சிறப்பாக செயல்படுவதை விட, தான் சரியாக செயல்படுகிறோம் என முழுமையாக அவர் நம்பினார். அந்த உறுதிப்பாடு இருந்தது” என அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் வெங்கடேஷ்?
கடந்த 2021 ஆம் ஆண்டு KKR அணிக்காக வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார், 10 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்து அந்த அணி இறுதிப் போட்டியை எட்டியது, அங்கு அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோற்றனர். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அணிக்கான பங்களிப்பை வழங்கியவர், 2024 ஆம் ஆண்டு KKR சாம்பியன் பட்டம் வென்ற சீசனில், இடது கை வீரர் மீண்டும் 370 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற மெகா ஏலத்தில் 23.75 கோடிக்கு வெங்கடேஷ் கொல்கத்தா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் 2025 சீசனில், அவர் 11 போட்டிகளில் 142 ரன்கள் மட்டுமே எடுக்க அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார், இந்நிலையில் அவர் குறித்து தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் பேசியிருப்பது, வெங்கடேஷ் மீண்டும் கொல்கத்தாவில் இணைவது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.




















