மேலும் அறிய

Kalaignar Pen Award: 2022ன் கலைஞர் எழுதுகோல் விருது.. மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு அறிவிப்பு

2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர்  வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என்று  முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பில்,” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதல்படி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று “சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘ கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்” என அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர்  ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகப் பல ஆண்டுகள்
பணியாற்றிப் பெற்றுள்ள நீண்ட அனுபவங்களையும், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந் தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர்  வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என்று  முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விருதானது ரூ.5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் கொண்டுள்ளது. வி.என்.சாமி பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி முதிர்ந்த அனுபவம் பெற்றவர். இவர் மதுரை
வில்லாபுரத்தைச் சேர்ந்தவர். 9-6-1931 அன்று பிறந்தவர்: 92 ஆண்டுகள் நிறைந்தவர். இளமையில் தந்தை பெரியார் அவர்களின் உதவியாளராகத் திகழ்ந்தவர்.

தமிழ்நாடு, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றியபின் 1968-இல் தினமணி நாளிதழில் சேர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றி, தலைமைச் செய்தியாளராக உயர்ந்து 1989ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றுள்ளார். பல்வேறு நூல்களைப் படைத்துள்ள  வி.என்.சாமி அவர்கள் எழுதிய “புகழ்பெற்ற கடற்போர்கள்” என்னும் நூல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்
மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் தமிழ்நாட்டின் வால்ட்விட்மன் என்று வி.என்.சாமி
அவர்களைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Musk Criticizes Trump: “முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
“முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musk Criticizes Trump: “முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
“முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
D Jayakumar  : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
D Jayakumar : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
Embed widget