பாஜக ஆட்சி செய்யும் வட மாநிலங்களில் மக்கள் தெளிவு பெற்று வருகிறார்கள் - இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத்...!
பாஜக ஆட்சி செய்யும் வட மாநிலங்களில் மக்கள் தெளிவு பெற்று வருகிறார்கள் இதன் காரணமாக பாஜக இல்லாத இந்தியா உருவாகும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக விச்சு லெனின் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் வட மாநிலங்களில் மக்கள் தெளிவு பெற்று வருவதன் காரணமாக, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இல்லாத இந்தியா உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் கூறியதாவது;
இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தின் நோக்கம்
தற்போது சீர்காழியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் நோக்கம் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் இளைஞர் காங்கிரஸ் சார்பாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிப்பது என்பது ஆகும்.
நம்ம ஊரு சாப்பாடு.. இட்லி, தோசை, காபி என வரிந்துகட்டி சாப்பிட்ட ஹன்சிகா.. இதுதான் ஸ்பெஷல்..
கோவை பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு கண்டனம்
கோவை பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், "விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறது. அதற்கு நீங்கள் எல்லாம் ஆதரவாக இருக்கிறீர்கள். உங்கள் சமுதாயத்தை எதிர்க்கும் போது நீங்கள் அமைதியாக இருக்கலாமா? என அவர் பேசியது சாதிய வன்கொடுமை தூண்டும் அளவில் அமைந்துள்ளது. அதற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ள அவரே வன்முறை தூண்டும் வகையில் பேசுவது தவறான முன் உதாரணமாக உள்ளது. அவரது பேச்சை திருத்தி கொள்ள வேண்டும், நிறுத்திக் கொள்ள வேண்டும்"
ஹரியானாவில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை பெற்று வெற்றிபெறும்
ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தல் நிறைவுற்றிருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வந்துள்ளது. இது காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை பெற்று வெற்றிபெறும் எனவும், பத்தாண்டு கால பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானதால் எதிர்த்து காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதற்காக மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது.
இது போன்று வட மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்யும் இடங்களில் எல்லாம் மக்கள் தெளிவு பெற்று வருகிறார்கள். எனவே பாஜக இல்லாத இந்தியா உருவாகும் என மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

