மேலும் அறிய

Car Offers October: பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமா? ஒவ்வொரு நிறுவனத்தின் தள்ளுபடி, சலுகை விவரம் இதோ..!

Car Offers October: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அக்டோபர் மாதத்தில் ஒவ்வொரு காருக்கும், உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் சலுகை மற்றும் தள்ளுபடி விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Car Offers October: இந்தியாவில் பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களும், அக்டோபர் மாதத்திற்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளன.

அக்டோபர் மாத ஆட்டோமொபைல் சலுகைகள்:

தொற்றுநோய்க்குப் பிந்தைய தேவை அதிகரிப்புக்குப் பிறகு வந்த விற்பனையில் தற்போது பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பண்டிகைக் காலத்தால் தூண்டப்பட்ட பருவகால தேவை அதிகரிப்பை, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் தற்போது எதிர்பார்க்கிறார்கள். தீபாவளிக்கு இந்த தேவை மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் விளைவாக, Maruti Suzuki, Tata, MG, Mahindra & Mahindra, Honda, and Hyundai உள்ளிட்ட நிறுவனங்கள், நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி போன்ற முக்கிய அக்டோபர் பண்டிகைகளை முன்னிட்டு பல சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளன. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பதிவாகும் வாகன விற்பனை, ஆண்டு விற்பனையில் 30 முதல் 40 சதவிகிதமாகும்,.

மாருதி சூசுகி கார்களுக்கான சலுகைகள்:

Maruti Suzuki ஆனது Alto K10 மற்றும் S-Presso ஆகிய கார் மாடல்களுக்கும்,  ரூ.40,000 வரை தள்ளுபடியுடன் பல மாடல்களுக்கு விலைக் குறைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் WagonR 15,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையிலான சலுகைகளைப் பெறுகிறது. பிரெஸ்ஸா மற்றும் ஸ்விஃப்ட் ரூ.10,000 தள்ளுபடி பெறுகின்றன. அதிகபட்சமாக ஜிம்னிக்கு ரூ.2.5 லட்சம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

ஹுண்டாய் கார்களுக்கான சலுகைகள்:

ஹூண்டாய் வாங்குபவர்களுக்கு, Grand i10 Nios ரூ.35,000 வரை தள்ளுபடியும், ஆரா செடான் ரூ.30,000 தள்ளுபடியும், வென்யு SUVக்கு ரூ. 45,000 சலுகையும், டஸ்கான் மற்றும் கோனா EV போன்ற பிரீமியம் மாடல்களுக்கு ரூ.2 லட்சம் வரையும் தள்ளுபடியும் கிடைக்கிறது .

மஹிந்திரா கார்களுக்கான சலுகைகள்:

மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) Scorpio மீதான தள்ளுபடியை ரூ.20,271 லிருந்து ரூ.1 லட்சம் வரை உயர்த்தியுள்ளது. Thar SUV-க்கான சலுகையானது ரூ. 20,000-லிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது .

ஹோண்டா கார்களுக்கான சலுகைகள்:

ஹோண்டா நிறுவனம் அமேஸ் கார் மாடலுக்கு கடந்த மாதம் வழங்கிய ரூ.96,000 என்ற சலுகையை, தற்போது ரூ.112,000 ஆக உயர்த்தியுள்ளது. இதேபோன்று சிட்டிக்கு மாடல் காருக்கான சலுகையை  ரூ.88,000 இலிருந்து ரூ.114,000 ஆகவும் அதிகரித்துள்ளது. எலிவேட் எஸ்யுவி மாடலுக்கான தள்ளுபடியை கூடுதலாக ரூ.10,000 அதிகரித்து மொத்தமாக ரூ.75,000 என நிர்ணயிக்க்கப்பட்டுள்ளது.

டாடா கார்களுக்கான சலுகைகள்:

அக்டோபர் 31 ஆம் தேதி வரை டாடா தனது மின்சார வாகனங்களுக்கு (EVகள்) ரூ.3 லட்சம் வரையிலான பண்டிகை சலுகைகளையும் , பெட்ரோல், டீசல் மற்றும் CNG வகைகளில் ரூ.2.03 லட்சம் வரையிலான நன்மைகளையும் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், சொகுசு கார் உற்பத்தியாளர்களான ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவையும் வலுவான பண்டிகை கால தேவையை எதிர்பார்க்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
December 2024:  கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ்! ஆண்டின் கடைசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா?
December 2024: கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ்! ஆண்டின் கடைசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா?
Rasipalan December 01:  கடைசி மாதத்தின் முதல் நாள்! எந்த ராசிக்கு எப்படி?
Rasipalan December 01: கடைசி மாதத்தின் முதல் நாள்! எந்த ராசிக்கு எப்படி?
Chembarambakkam: ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா? செம்பரம்பாக்கம் ஏரியால் புது தலைவலியா?
Chembarambakkam: ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா? செம்பரம்பாக்கம் ஏரியால் புது தலைவலியா?
Embed widget