மேலும் அறிய

Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளது.

தொடங்கியது வேட்டையன் புக்கிங்:

வேட்டையன் படம் வெளியாக இருப்பதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வேட்டையன் படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கியது முதலே வேட்டையன் படத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

சென்னையின் பிரபல திரையரங்குகளில் இணையத்தில் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலே டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று முடிந்தது. மற்ற திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால், ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்பு:

ரஜினிகாந்த் படம் என்றாலே பொதுவாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்பதாலும், ஜெய்பீம் படத்திற்கு பிறகு த.ஞானவேல் இயக்கியுள்ள படம் என்பதாலும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியான ரஜினிகாந்த் – என்கவுன்டரை எதிர்க்கும் உயரதிகாரி அமிதாப்பச்சன் இவர்களுக்கு இடையே தொடர் கொலைகளைச் செய்யும் கொலையாளியை கண்டுபிடிக்கும் ரஜினிகாந்த் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் வேட்டையன் படம் உருவாகியுள்ளது. பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார்.

வசூலை வாரிக்குவிக்குமா?

இவர்களுடன் மஞ்சுவாரியர், பகத் பாசில், ராணா, ரித்திகாசிங், கிஷோர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை அக்டோபர் 11 மற்றும் அக்டோபர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர் விடுமுறையை கணக்கில் கொண்டு வரும் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நான்கு நாட்கள் வேட்டையன் படம் வசூலை வாரிக்குவிக்கும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் அவர்களுக்கு மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது. லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் பெரியளவு வெற்றியைத் தராத சூழலில், வேட்டையன் படத்தின் வெற்றியையே லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் நம்பியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget