மேலும் அறிய
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
அம்மா ஆட்சி கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை ஸ்டாலின் நிறுத்தியது ஏன் ? குடிமராமத்து திட்டம் ஸ்டாலினுக்கு ஜென்மபகையா? அல்லது குடும்பப் பகையா ? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி.

ஆர்.பி.உதயகுமார்
கொடுத்த வாக்குறுதிகளை மறந்து ஸ்டாலின் நடித்தால் திமுகவிற்கு ஓட்டு போடவும் மக்கள் மறந்து போவார்கள் என்பதை ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும்.
திமுகவிற்கு ஓட்டு போடவும் மக்கள் மறந்து போவார்கள்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தியில்..,” கடந்த சட்டமன்றத் தேர்தலில் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அன்றைக்கு எதிர்க்கட்சிதலைவராக இருக்கும் பொழுது 525 தேர்தல் வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் நான்கு மாதகாலமே மட்டுமே தான் ஆயுள் இருக்கிறது. தமிழக மக்களும் இன்று விடியும், நாளை விடியும் என காத்திருந்து,காத்திருந்து வேதனை தான் மிச்சமாய் இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை மறந்து ஸ்டாலின் நடித்தால் திமுகவிற்கு ஓட்டு போடவும் மக்கள் மறந்து போவார்கள் என்பதை ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும்.
அரசியல் காழ்புரணச்சிக்காக சொல்லவில்லை
தித்வா புயல் காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு விடியலை தராத ஸ்டாலின் அவர்களுக்கு நிவாரணமாவது வழங்க முன் வருவாரா? என்ற வேதனையிலே விவசாயிகள் இருக்கிறார்கள். தித்வா புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று ஈ.பி.எஸ்., தொடர்ந்து அறிக்கை வயிலாக அரசுக்கு வலியுறுத்தி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 24 மணி நேரம் போகவில்லை, நாட்டு மக்கள் மீது அக்கறை செலுத்துவதற்கு என்று நினைத்து விடாதீர்கள்? தன்னுடைய வீட்டு மக்களை பாதுகாப்பதற்காக அவருக்கு 24 மணி நேரம் போதவில்லை, ஆனால் என்ன செய்வது? இயற்கை ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் கொடுத்திருக்கிறது. 24 மணி நேரத்திற்கு மேலே ஒரு வேளை கடவுள் அவருக்கு கூடுதல் நேரம் கொடுத்தால் இந்த பாதிக்கப்படுகிற விவசாயிகளைப் பற்றி அவர் சிந்திப்பதற்கு ஏதேனும் நேரம் அவருக்கு கிடைக்குமோ, இதை நான் அரசியல் காழ்புரணச்சிக்காக சொல்லவில்லை. தித்வா புயலால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் பாதிப்படைந்துள்ளது, ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பப்பாளி மரங்களும் பாதிப்படைந்துள்ளது . சில மாவட்டங்களில் இரண்டு அடிக்கு மேலே வயலில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் நெல் பயிர்கள் அழுகிய நிலையில் உள்ளதால் இன்றைக்கு விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
அம்மா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தால் நிலத்தில் நீர் உயர்ந்தது.
ஆனால் 2021 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு குடிமராமத்து பணியை ஸ்டாலின் நிறுத்திவிட்டார் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.அதனை நிறுத்துவதற்கு என்ன காரணம் என்று ஒரு முறையாவது முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்திலே? மக்கள் மன்றத்திலே தெரிவித்திருக்கிறாரா? குடிமராமத்து திட்டம் என்ன ஸ்டாலினுக்கு ஜென்ம பகையா? குடும்ப தகராறா? குடிமராமத்து திட்டம் விவசாயிகளுக்கான நிலத்தடி உயர்வதற்காக ஒரு அற்புதமான திட்டத்தை எடப்பாடியார் செயல்படுத்தினார் என்ற ஒரே காரணத்திற்காக விவசாயிகள் வஞ்சிக்கும் வகையில் இன்றைக்கு பழிவாங்கியுள்ளீர்கள்.
மக்களை கொஞ்சம் கவனியுங்கள்,
விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் 35,000 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, வேதனையில் உள்ளார்கள் ஆகவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதாரத்தை உடனடியாக வருவாய் துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரங்கள் வழங்க வேண்டும். விவசாயிகளின் அச்சத்தையும் வேதனையும் போக்க முன்வர வேண்டும். முதலமைச்சர் அவர்களே? இந்த மக்களை கொஞ்சம் கவனியுங்கள், கொஞ்சம் கொஞ்சம் மக்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். விவசாயிகள், இளைஞர்கள் ,அரசு ஊழியர்கள் கண்ணீரோடு உள்ளார்கள். இந்த ஆட்சியிலே இன்னும் நான்கு மாத காலத்திலே என்ன விடியலை தரப்போகிறது? மக்கள் வேதனையை எத்தனை முறை சொன்னாலும் திரும்பத் திரும்ப சொன்னாலும் அதை திரும்பி கூட பார்க்க இந்த கல்மனம் படைத்த முதலமைச்சராக உள்ளீர்கள்? எனக் கூறினார் வருகின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் போற்றுவார்கள்” என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















