மேலும் அறிய

Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

டிட்வா புயல்- தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், டிசம்பம் மாத தொடக்கமே அதிரடியாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் டிட்வா புயல் இலங்கையை புரட்டிப்போட்ட நிலையில், தமிழக எல்லையில் நுழையும் போதே ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக்காற்றோடு மழையானது கொட்டியது. அடுத்து டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டைக்கு மட்டுமே கடந்த நவம்பர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்த மழையானது குறிப்பிட்ட தேதிகளில் பெய்யவில்லை.

சென்னையில் 24 மணி நேர கன மழை

ஆனால் வானிலை ஆய்வாளர்களே எதிர்பார்க்காத திடீர் டுவிஸ்ட் ஏற்பட்டு சென்னைக்கு அருகே  வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருந்த போதும் மழை இல்லாத மேகங்கள் மட்டுமே கொண்டிருந்த டிட்வா, அடுத்த அடுத்த நகர்வுகளில் மழை மேகங்களை உருவாக்கியது. இதனால் சென்னையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய மழையானது கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியும் காட்சியளித்தது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக களம் இறங்கினர். இந்த சூழ்நிலையில் கடந்த 18 மணி நேரமாக சென்னை அருகே மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  

 

இன்று இரவு கரையை கடக்கும்

இது தொடர்பாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு அருகில்  தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது என தெரிவித்துள்ளார். கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு கிழக்கே 40கிமீ தொலைவில் ஒரே இடத்தில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்.

கரையை கடப்பதற்து முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடரும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிககனமழை முதல் அதித கனமழை வரை பதிவாக வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும் தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

தினசரி அறுவடை... தடையற்ற வருமானம்! பல பயிர் சாகுபடியால் குவியும் லாபம் - கலக்கும் விழுப்புரம் விவசாயி
தினசரி அறுவடை... தடையற்ற வருமானம்! பல பயிர் சாகுபடியால் குவியும் லாபம் - கலக்கும் விழுப்புரம் விவசாயி
பழனி கோயில் நில மோசடி.! விஜய் அரசுக்கு ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ் -முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக
பழனி கோயில் நில மோசடி.! விஜய் அரசுக்கு ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ் -முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக
9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?
​9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?
ரூ.63 லட்சம் அவுட் !! சினிமா பாணியில் நடந்த தங்க மோசடி !! உணவகத்தில் நடந்தது என்ன ?
ரூ.63 லட்சம் அவுட் !! சினிமா பாணியில் நடந்த தங்க மோசடி !! உணவகத்தில் நடந்தது என்ன ?

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
MK Stalin: ”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
DMK TVK: எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?
எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?
பழனி கோயில் நில மோசடி.! விஜய் அரசுக்கு ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ் -முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக
பழனி கோயில் நில மோசடி.! விஜய் அரசுக்கு ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ் -முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக
TVK Vijay:”தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்” பாஜக அரசுக்கு TVK கடும் கண்டனம் - CM விஜய் வாய் திறப்பாரா?
”தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்” பாஜக அரசுக்கு TVK கடும் கண்டனம் - CM விஜய் வாய் திறப்பாரா?
Senthil Balaji: கை விட்ட நீதிமன்றம்.! செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் போலீஸ்.? உச்சக்கட்ட பரபரப்பில் திமுக
கை விட்ட நீதிமன்றம்.! செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் போலீஸ்.? உச்சக்கட்ட பரபரப்பில் திமுக
Embed widget