Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பாக நாளை கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாமல் கடந்த 24 மணி நேரமாக மழையானது கொட்டி வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை
விடுமுறை என்றாலே மாணவர்கள் முதல் ஊழியர்கள் வரை கொண்டாட்டம் தான், அந்த வகையில் வார விடுமுறைகள், பண்டிகை கால விடுமுறை என விடுமுறை கிடைத்தாலே நண்பர்களோடு வெளியூர் பயணம், உறவினர்கள் வீட்டிற்கு பயணம் என புறப்பட்டு விடுவார்கள்.உள்ளூரில் நடைபெறும் கோயில் திருவிழா, குருபூஜைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீப திருநாளையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை(டிசம்பர் 3ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா
கோட்டாறு தூய சவேரியார் பேராலயம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை 10 நாட்கள் சிறப்பு பிராத்தனை, தேர் திருவிழா நடைபெறும். இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நாளான நாளை டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு பிரார்த்தனை நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் சாதி, மத பேதமின்றி தமிழ்நாடு, கேரளாவிலிருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த திருவிழாவையொட்டி டிசம்பர் 3 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி உள்ளூர் விடுமுறை
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி நாளை (டிசம்பர் 3ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பணியில் உள்ள அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட வேண்டும் எனவும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற( டிசம்பர் 6ம் தேதி) சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதே போல திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளையொட்டி நாளை திருவண்ணாமலை மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தையொட்டி பல மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியவுள்ளனர். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.





















