மேலும் அறிய
Advertisement
‛கோடநாடு சம்பவத்தில் 4 ஆண்டுகள் அமைதி காத்தது ஏன்?’ -ஓபிஎஸ் மகன் பரபரப்பு பதிவு!
Kodanadu: ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது இதற்கு நியாயம் கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது.
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக கூறும் ஓபிஎஸ்.,யின் இளைய மகன் ஜெய பிரதீப், நேற்று பரபரப்பான பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில்
‛‛நீதி வேண்டும்
எங்களின் குடும்ப தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவன்
அம்மாவின் உண்மை தொண்டன்
வி ப ஜெயப்பிரதீப்’’
என்று அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு, தற்போது கட்சியில் பிளவு ஏற்பட்டதும், இபிஎஸ்.,க்கு எதிராக செயல்படுவதாக நினைத்து, இந்த விவகாரத்தை ஓபிஎஸ்.,யின் இளையமகன் கையில் எடுப்பதாக சிலர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் ஏன், இந்த கருத்தை தெரிவித்தேன் என்றும், எதற்காக கடந்த ஆண்டுகளில் அமைதி காத்தேன் என்பதை மற்றொரு மீள் பதிவாக ஜெயபிரதீப் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளது இதோ...
‛‛
உண்மை ஒருநாள் வெல்லும்
கொடநாடு சம்பவம் பற்றி நான்கு வருடமாக நான் எதுவும் பேசவில்லை என்று சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலான பங்களாவில், சம்பவம் நடந்த ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன் .
அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது, அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன் .
இரண்டு தினம் முன்பு தொலைக்காட்சி ஒன்றில் நடந்த கொடநாடு சம்பவத்தைப் பற்றிய தொகுப்பை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. நேற்றைய என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது.
மற்றவர்கள் மீது சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை பத்திரிக்கையாளரும் இல்லை சாதாரண மக்களின் ஒருவன் .
ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது இதற்கு நியாயம் கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது.
இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது.
நமது கட்சிக்கு மேலும் கலங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் .
இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கழக உண்மை தொண்டனின் எண்ணத்தை தான் நான் பதிவிட்டு இருந்தேன்.
நன்றி
அம்மாவின் உண்மை தொண்டன்
வி ப ஜெய பிரதீப்’’
என்று அந்த பதிவில் ஓபிஎஸ்.,யின் இளைய மகன் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion