‛நகை கடன் ரத்தாக வாய்ப்பில்லை... திமுக வாக்குறுதி எக்ஸ்பைரி...’ கொதித்த எடப்பாடி பழனிச்சாமி!
நாங்கள் நினைத்து இருந்தால் எனது 4 ஆண்டுகால ஆட்சியில் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை.- எடப்பாடி பழனிச்சாமி.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு கட்சியினரிடையே ஆலோசனை வழங்கி வருகிறார்.
அதிமுகவினர் முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியது இதோ:
மக்களின் பிரச்சனையை எளிமையாக தீர்க்கும் கட்சி அதிமுக. உண்மையான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. திமுக என்றாலே திள்ளுமுல்லு கட்சி தான். கடந்த கால உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்தினார்கள் என்று உங்களுக்கு தெரியும். இன்றைய சூழலுக்கு ஏற்றார் போல் அதிமுக வேலை செய்ய வேண்டும். வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று நாம் செய்ததை சொல்லி வாக்கு கேட்க்க வேண்டும்.
திமுக சட்டமன்ற தேர்தலில் 525 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் Neet ரத்து ஒன்று, பச்சை பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இதை மறந்துவிட்டார்கள். விவசாய கடன் ரத்துக்கு எதுவும் செய்யவில்லை. நகை கடன் ரத்துக்கும் ஏகப்பட்ட கண்டிசன் போட்டுவிட்டார் ஸ்டாலின். அதைக் கடந்து கடன் ரத்தாகுமா இல்லையா என மக்கள் குழப்பத்தில் உள்ளார். தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பேச்சு, பின்பு ஒரு பேச்சு இது தான் திமுக.
மக்களோடு தொடர்புடைய ஒரே துறை உள்ளாட்சி துறை தான். தேர்தலோடு திமுகவின் தேர்தலை அறிவிப்புகள் முடிந்துவிடும் இதையெல்லாம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். 4-மாத காலத்தில் திமுக என்ன திட்டம் செய்துள்ளது. எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டுவரவில்லை. அதிமுகவினர் மீது வழக்கு போடுவது, முன்னால் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது அவதூறு ஏற்படுத்துவது என்றே காலத்தை கழித்து வருகின்றனர். மக்களுக்காக சிந்திக்கவில்லை. எங்களை பழிவாங்க நேரத்தை வீணடித்து வருகிறார்கள். நாங்கள் எதைக் கண்டும் அஞ்சப்போவது இல்லை.
நாங்கள் நினைத்து இருந்தால் எனது 4 ஆண்டுகால ஆட்சியில் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை. நாம் கொண்டு வந்த திட்டத்தை தான் திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டியும் வருகிறார் இப்போதைய முதல்வர் ஸ்டாலின்.
இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:
வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?
கோயில் நிலத்தில் கிஷ்கிந்தா தீம் பார்க்?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி
அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!
மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?
மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?