திமுகவில் இணைகிறாரா மகேந்திரன்? பரவிய செய்திக்கு பதிலளித்த மகேந்திரன்!

டாக்டர் மகேந்திரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவாளர்கள், சுமார் 5000 பேருடன் திமுகவில் இணைய உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது, அது குறித்து அவர் கருத்தும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US: 

டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கடந்த மே மாதம் அந்தக்கட்சியில் இருந்து விலகினார். அவர் விலகும்போது அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். இவரைத் தொடர்ந்து, அக்கட்சியில் பல முன்னணி நிர்வாகிகள் விலகினார்கள்.

இதனைத்தொடர்ந்து, மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. ஆனால், அதை அவர் மறுத்தார். இந்நிலையில், டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருடைய ஆதரவாளர்கள் கோவை மாவட்டத்தில் இருந்து சுமார் 5000 பேருடன் திமுகவில் இணைய உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.

Mahendran Interview : எத்தனை கோடிகளை பெற்றார் கமல்? கண்கலங்கிய மகேந்திரன்

இதுகுறித்து மகேந்திரன் நாளிதழ் ஒன்றுக்கு கூறுகையில், “தற்போது வரை, எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை. எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் நிச்சயமாக ஒரு முடிவு எடுப்பேன். அப்போது ஊடகங்களை அழைத்து கண்டிப்பாக கூறுவேன்” என்று கூறியுள்ளார்.  இந்த கருத்தில் ஒரு விசயத்தை பார்க்க முடிகிறது. இல்லை என அவர் மறுக்கவில்லை. தற்போது முடிவு செய்யவில்லை என்கிறார். இம்மாத இறுதியில் முடிவெடுப்பேன் என்கிறார். இதுவும் ஒருவிதமான சந்தேக நிலையைையே ஏற்படுத்துகிறது. என்றாலும், இன்றைய இணைப்பு செய்தியை அவர் மறுத்துள்ளார். 

யார் இந்த மகேந்திரன்? எப்படி மநீம வந்தார்?

பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன், எம்பிபிஎஸ் படித்து முடித்து 30 ஆண்டுகள் மருத்துவ தொழில் செய்து வந்தவர். மேலும், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், விவசாயத்தின் மீது தனியாத ஆர்வம் கொண்டு பயிர்வகையை ஏற்றுமதி  செய்துவருகிறார்.  சமூகம் சார்ந்த பிரச்னைகளைக் களைவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட மகேந்திரன், தானாகவே முன்வந்து மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.  இவரின், ஆர்வமிக்க செயல்பாடுகளை கவனித்து வந்த கமல்ஹாசன், அவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவியை கொடுத்தார்.திமுகவில் இணைகிறாரா மகேந்திரன்? பரவிய செய்திக்கு பதிலளித்த மகேந்திரன்!

அத்துடன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தார். அதற்கேற்றார்போல, அங்கு 1.44 லட்சம் வாக்குகள் பெற்று  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில், 28,634 வாக்குகள் சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து கிடைத்தது. இதன்காரணமாக, 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட்டார். கோவை தொகுதியில் மகேந்திரன் பெற்ற வாக்குகளே, கோவை தெற்கில் கமல்ஹாசனை போட்டியிட வைத்தது. ஆனால், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. கடைசி வரை வானதி சீனிவாசன் உடன் போராடிய கமல், 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது.

மிகப்பெரிய தோல்விக்குப் பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றமில்லை எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார் அதன் துணைத் தலைவர் மகேந்திரன்.

Mahendran Political Profile: யார் இந்த மகேந்திரன்? மநீம வந்ததும், சென்றதும் எப்படி?

Tags: dmk Stalin mnm kamal Dr. Mahendran

தொடர்புடைய செய்திகள்

‛நோ நோ நோ...’ ஸ்ட்ரிக்ட் காட்டிய அதிமுக! திமுகவில் இணைந்த மாஜிக்கள்! நெருக்கடியில் சசிகலா!

‛நோ நோ நோ...’ ஸ்ட்ரிக்ட் காட்டிய அதிமுக! திமுகவில் இணைந்த மாஜிக்கள்! நெருக்கடியில் சசிகலா!

VP Singh : ‛ஆன்டி க்ளைமாக்ஸ் கூட்டணிகளின் நாயகன்’ வி.பி.சிங் பிறந்த தினம்!

VP Singh : ‛ஆன்டி க்ளைமாக்ஸ் கூட்டணிகளின் நாயகன்’ வி.பி.சிங் பிறந்த தினம்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

CM Stalin on DMK: ‛அடக்கப்பட்ட யானை... காட்டு யானை... கும்கி யானை...’ முதல்வர் பேச்சை கிண்டலடித்து வானதி ட்விட்!

CM Stalin on DMK: ‛அடக்கப்பட்ட யானை... காட்டு யானை... கும்கி யானை...’  முதல்வர் பேச்சை கிண்டலடித்து வானதி ட்விட்!

போலீசார் தாக்கி பலியான வியாபாரி - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

போலீசார் தாக்கி பலியான வியாபாரி - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

டாப் நியூஸ்

Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

Rajagopalan Case: பாலியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டாஸ் பாய்ந்தது

Rajagopalan Case: பாலியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டாஸ் பாய்ந்தது

கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு: மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு தள்ளுபடி

கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு: மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு தள்ளுபடி

Girl Harassment Case: ‛கன்’னும் என்னோடது தான்... பொண்ணும் என்னோடது தான்... போக்சோ காமுகன் எஸ்.ஐ., சதீஷ் கதை!

Girl Harassment Case: ‛கன்’னும் என்னோடது தான்... பொண்ணும் என்னோடது தான்... போக்சோ காமுகன் எஸ்.ஐ., சதீஷ் கதை!