அங்க என்ன நடக்கிறது, கடவுளுக்குத்தான் தெரியும்.. ஜெயக்குமார் ஏன் இப்படி சொன்னார் ?
முதலமைச்சர் மற்றும் அண்ணாமலை வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார்கள் அங்கே என்ன நடக்கிறது என்பது கடவுளுக்கு தான் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சென்னை பெரம்பூரில் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ;
திமுக அரசை பொறுத்தவரை முதலாளித்துவ அரசு கார்ப்பரேட் அரசு எத்தனையோ ஏழை எளிய மாணவர்கள் திறமையானவர்கள் இருக்கிறார்கள் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் நடத்தி அதன் மூலம் ஏழை எளிய நடுத்தர மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை வெளி கொண்டு வரும் வகையில் ஒரு அரசு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வரவேற்கத்தக்கது.
அது போன்ற எந்த ஒரு செயலையும் இவர்கள் செய்யவில்லை இது ஒரு முதலாளித்துவ அரசு இது ஒரு கோடீஸ்வரர் பெரும் பணக்காரர்களுக்கான நடத்தப்படுவது தான் ஃபார்முலா 4 கார் பந்தயம். ஏற்கனவே அரசு இந்த கார் பந்தயத்திற்கு 48 கோடி செலவழித்தது ஆனால் அதையும் திருப்பித் தரவில்லை. இது ஃபார்முலா 4 ரேஸா ?அல்லது நாய் ரேஸா என்பது தெரியவில்லை. ஒரு நாய் உள்ளே புகுந்து ஒரு மணி நேரம் அவர்களுக்கு தண்ணீர் காட்டியுள்ளது. எஃப்ஐஏ சான்றிதழ் முன்பே வாங்க வேண்டும் அல்லவா ஏன் முன்பே வாங்கவில்லை.
தகுதி சுற்றிற்கு மட்டும் ரூ.1700 ல் இருந்து 17000 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு 10 ஆயிரம் பேரிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணம் போச்சு இது குறித்து விளையாட்டு துறையோ அல்லது அரசோ தெளிவுபடுத்தவில்லை. இந்தப் போட்டிகள் மூலம் வசூல் செய்யப்படும் பணம் யாருக்கு செல்கிறது ஒரு புறம் முதல்வர் நாடு எப்படி போனால் என்ன மழை வந்தால் என்ன வெள்ளம் வந்தால் என்ன என அமெரிக்கா சென்று உள்ளார்.
முதல்வர் மற்றும் அண்ணாமலை ஆகியோர் வெளிநாட்டுக்கு சென்று இருக்கிறார்கள் அங்கே என்ன நடக்கிறது என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் எனக் கூறிய அவர்,
இன்னும் சில தினங்களில் நாம் பருவமழையை எதிர்கொள்ள இருக்கிறோம். ஆனால் அதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் ஒட்டுமொத்த துறைகளும் கார் பந்தயத்தில் மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இனியாவது இந்த அரசு திருந்துமா என்றால் திருந்தாது முதலமைச்சர் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஏன் காவலர்கள் நிறுத்தப்பட வேண்டும் அனைவரும் கிட்டத்தட்ட பல மணி நேரங்கள் பாதுகாப்பிற்காக நிற்கிறார்கள் அது தேவையற்றது. கால்பந்தயத்திற்கு போடப்பட்டிருந்த சாலைகள் கூட முறையாக போடப்படவில்லை ஆங்காங்கே பேட்ச் ஒர்க்குகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு போதை பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்தி விட்டாலே போதை பொருள் நடமாட்டத்தை குறைக்க முடியும் சாதிக் பாட்ஷா போன்றவரை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தாலும் போதை பொருள் பயன்பாடு என்பது இல்லாமல் இருக்கும்..
இன்றைக்கு போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது என்றால் அதற்கு முழுக்க முழுக்க திமுக அரசுதான் காரணம். பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை லண்டனுக்கு சென்றுள்ளார் தற்பொழுது 5 பேர் வந்துள்ளார்கள் யார் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழ்நாட்டில் ஒரு கார்ப்பரேட் பேணி என்றால் அகில இந்திய அளவில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி உள்ளது அது பிஜேபிதான். நடிகைகள் கூறும் குற்றச்சாட்டு உண்மை இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூவம் என்றாலே கருணாநிதி தான் ஞாபகம் வரும் அன்றைக்கு கூவம் மறு சீரமைப்பு எனக் கூறி மிகப் பெரிய அளவில் கொள்ளையடித்தார்கள் அதனை எம்ஜிஆர் வெளிக் கொண்டு வந்தார் அதைத்தான் தற்பொழுது இருக்கக்கூடிய அரசு செய்கிறது. கூவத்தை இவர்கள் மறு சீரமைப்பு செய்ய மாட்டார்கள் இவர்களைத்தான் பொருளாதார ரீதியில் மறுசீரமைப்பு செய்து கொள்ளையடிப்பார்கள்
திவாகரன் போன்றவர்கள் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை முதல்வர் குறித்தோ உதயநிதி குறித்து அல்லது மற்ற பிற அரசியல் கட்சி தலைவர் குறித்து கேளுங்கள் பதில் சொல்கிறேன்.
திமுக அரசியல் பொறுத்த வரை மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் சரக்கு விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ரூ.18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என முதலமைச்சர் பொய் சொல்கிறார் பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா கிட்டத்தட்ட 65 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் வாய் கூசாமல் இவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறார் என்றார்