வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற பிறகு, வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட முன்னாள் முதல்வர்

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற பிறகு, என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ந் தேதி, புதுவையிலும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. 

புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. ரங்கசாமி ஏனாம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.  இதுதவிர, பிற தொகுதிகளில் அவரது கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனாலும், என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இது கட்சியினர், தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற பிறகு, வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட முன்னாள் முதல்வர்

இதன்படி தட்டாஞ்சாவடி, ஏனாம் - ரங்கசாமி, திருப்புவனை - கோபிகா, மங்கலம் - ஜெயகுமார், உழவர்கரை - பன்னீர்செல்வம், கதிர்காமம் - ரமேஷ், இந்திராநகர் - ஆறுமுகம், ராஜ்பவன் - லட்சுமி நாராயணன், அரியாங்குப்பம் - தட்சிணாமூர்த்தி, ஏம்பலம் - லட்சுமி காந்தன், நெட்டபாக்கம் - ராஜவேலு, பாகூர் - தனவேலு, நெடுங்காடு - சந்திர பிரியங்கா, காரைக்கால் வடக்கு - திருமுருகன், மாஹே - அப்துல் ரகுமான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்ற பிறகு, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது அரசியல் கட்சிகள் மத்தியில் விநோதமாக கருதப்படுகிறது.

Tags: BJP 2021 candidate list rangasamy pondichery nr congress assemble election 16 seats

தொடர்புடைய செய்திகள்

அதிமுக-பாமக கூட்டணியில் விரிசலா? பாமக வலுவான இடங்களில் அதிமுக தோல்வி எனச்சொல்லும் புகழேந்தி

அதிமுக-பாமக கூட்டணியில் விரிசலா? பாமக வலுவான இடங்களில் அதிமுக தோல்வி எனச்சொல்லும் புகழேந்தி

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு