தேர்தல் பணிக்காக டி.எஸ்.பி.க்கள், உதவி ஆணையர்கள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்காக டி.எஸ்.பி.க்கள், உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி.க்கள், உதவி ஆணையர்கள் தேர்தல் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, டி.ஜி.பி. திரிபாதி பிறப்பித்த உத்தரவின்படி, திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக உதவி ஆணையராக ஆனந்தகுமாரும், திருவொற்றியூர் உதவி ஆணையராக பொன்சங்கரும், சேலம் தெற்கு நகர் குற்றப்பிரிவு உதவி ஆணையராக கமலக்கண்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். வேப்பேரி உதவி ஆணையராக பாபுவும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.யாக பிரகாஷ்குமாரும், புளியந்தோப்பு உதவி ஆணையராக கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.யாக விஜயராமுலு, உயர்நீதிமன்ற உதவி ஆணையராக சரஸ்வதி, சென்னை போலீஸ் அகாடமி டி.எஸ்.பி.யாக அகஸ்டின் பால் சுதாகர், வில்லிவாக்கம் உதவி ஆணையராக ஸ்டீபன் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி.யாக ஹரிகுமார், எம்.கே.பி. நகர் உதவி ஆணையராக கலைச்செல்வன், விழுப்புரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.யாக பாலமுருகன், அண்ணாநகர் உதவி ஆணையராக ராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இவர்கள் தவிர மேலும் பல உதவி ஆணையர்களும், டி.எஸ்.பி.க்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.