மேலும் அறிய

Thirumavalavan on Reservation: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து: ‛தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை வரவேற்கிறேன்’ -திருமாவளவன்!

Thirumavalavan on Reservation: 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அவசரகதியில் கொண்டுவரப்பட்டது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியின்போது வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை வரவேற்கிறேன்.

ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு பொருத்தாமானதே. அதனையும் விசிக வரவேற்கிறது. தமிழ் தேசியம் என்றெல்லாம் நாம் பேசுவதற்கு நவம்பர் ஒன்றாம் தேதிதான் காரணம். அந்தத் தேதியையும் அரசு சார்பில் கொண்டாட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவம்பர் ஒன்றாம் தேதியை கொண்டாடுவதற்கு எல்லை போராட்ட வீரர்கள் உள்ளிட்டோரை அழைத்து பேச வேண்டும். நவம்பர் 1ஆம் தேதி, ஜூலை 18ஆம் தேதி இடையேயான முரண்பாடுகளை களைய வேண்டும். 

10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு அவசர கதியில் கொண்டுவரப்பட்டது. 10.5 சதவீத இட ஒதுக்கீடு இப்படித்தான் முடியும் என்று அதிமுக, பாமகவிற்கு தெரிந்தும் வாக்குக்காக மக்களை ஏமாற்றினர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைபெரியாறு அணையை கேரளா தன்னிச்சையாக திறந்துவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக விவசாய சங்கங்களை அழைத்து முதலமைச்சர் பேச வேண்டும் .  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மேல்முறையீடு செய்தால் பலனளிக்குமா என்பது தெரியவில்லை.

69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாப்பாக இருப்பதாகவே நினைக்கிறேன். ஆளுநர் ஆய்வு விவகாரத்தில் அரசு விழிப்புணர்வாக இருக்கிறது. மாநில சுயாட்சியை அரசு பாதுகாக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Virat Kohli Performance: எங்கே சறுக்குகிறார் கோலி...? ஏன் தொடர்கிறது தோல்வி? ஆராயும் ABP நாடு!

‛மாணவர்களின் பெற்றோர் கண்காணிக்கப்படுவர்...’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கரூரில் திறக்கப்பட்ட 1062 பள்ளிகள்...! - மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்...!

ஸ்டாலின் வீட்டில் உதயநிதியின் தீவிர ரசிகர் செய்த ரகளை... பதட்டமான முதல்வர் வீடு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget