Corona LIVE Updates : தமிழ்நாட்டில் 21, 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
LIVE

Background
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 21 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் இன்று மட்டும் 6000-ஐத் தாண்டியுள்ளது கொரோனா தொற்று எண்ணிக்கை. இன்று மட்டும் 144 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு - உயர்நீதி மன்றத்தில் வழக்கு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பத்திரிக்கையாளர்கள் முன்களப்பணியாளர்களாக அழைக்கப்படுவார்கள் - திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர்.
— M.K.Stalin (@mkstalin) May 4, 2021
முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்.
கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு. ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தலாம் - ராகுல் காந்தி எம்.பி.
2.75 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வருகை
தமிழ்நாட்டுக்கு 2.75 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று விமானம் மூலம் சென்னை வருகின்றன. 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வருகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

