Morning Headlines Today: காலை தலைப்புச் செய்திகள்: உள்ளூர் முதல் உலகம் வரை
20 ஏப்ரல் 2021 காலை 6 மணி வரையிலா முக்கிய தலைப்புச் செய்திகளின் தொகுப்பு இதோ.
மேற்குவங்கத்தில் 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 46 தொகுதிகளில் வாக்கு பதிவு நடக்கவுள்ளது.
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜென் தட்டுப்பாடு உள்ளது என்று நோயாளிகள் புகார்.
இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இரவு 10மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளை அதிகாரிகள் பூட்டினர். மேலும் அவசியமின்றி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம்.
இந்திய அளவில் நிலவும் ஆக்சிஜென் தட்டுப்பாடு, மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் கடும் கண்டனம். பிச்சை எடுத்தோ கடன் பெற்றோ மக்களுக்கு ஆக்சிஜென் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தல்.
தொடர்ந்த பரவும் கொரோனா, மஹாராஷ்டிராவில் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள். கட்டுப்பாடுகளை மீறினால் 50,000 வரை அபராதம்.
பியோலாஜிக்கல் ஈ தடுப்பூசி, இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு. ஆகஸ்ட் மாத வாக்கில் செயல்பாட்டிற்கு வரும் என்று தகவல்.
வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவது என்பது சாத்தியமில்லை. மும்பை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு விளக்கம்.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.
தற்போது வரை இந்தியாவிடம் கொரோனாவிற்கு தீர்வுகாணும் திட்டம் இல்லை. ஆக்சிஜென் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு இந்தியாவில் நிலவும் இந்த நேரத்தில், அதை ஏற்றுமதி செய்வது குற்றம் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் நான்கு ரஃபேல் போர்விமானங்கள் இந்தியா வந்தன. இந்திய விமானபடையில் ரஃபேல் போர்விமானங்களின் எண்ணிக்கை 18ஆக உயர்வு.
வாக்கு எண்ணிக்கையின்போது நிச்சயம் மேசைகளின் அளவு குறைக்கப்படமாட்டாது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாகு
கர்நாடகாவில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தகவல்.
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்தது சீரம் நிறுவனம். தனியார் மருத்துவமனைக்கு 600 ரூபாய்க்கும் அரசு மருத்துவமனைக்கு 400 ரூபாய்க்கும் விற்பனை.
சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வரும் நிலையில், உதயநிதி படத்திலும் சின்னத்திரை பிரபலம் சிவாங்கி இணைந்துள்ளதாக தகவல்.
மரத்தோடு மாநாடு, விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்ட மாநாடு படக்குழுவினர். நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு பங்கேற்பு.
நேற்று நடந்த இரண்டு ஐ.பி.எல் போட்டிகளில் பஞ்சாபை ஹைதெராபாத் அணி வீழ்த்திய நிலையில் ஹாட்ரிக் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி. நெல்லை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை - மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என தகவல்.