மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் 83 சதவீதம் பேருந்துங்கள் இயக்கம்: அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 137 பேருந்துகளில் தற்போது வரை 84  பேருந்துகள்  இயக்கப்பட்டுள்ளன எனவும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

தமிழ்நாடு போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை தொடங்கிவிட்ட நிலையில் மக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம்,  என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கள் அறிவித்திருந்தன. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 83 சதவீதம் பேருந்துங்கள் இயக்கம்: அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை!

இதுதொடர்பாக அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப்படவில்லை. அதேசமயம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் செயல்படும் தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.  இதில் 2 கோரிக்கைகளை மட்டுமே தற்போதைக்கு பரீசிலிக்க முடியும். மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என தொழிற்சங்கங்க நிர்வாகிகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால், இன்னும் கால அவகாசம் வழங்க முடியாது என அந்த வேண்டுகோளை தொழிற்சங்கங்கள் நிராகரிக்க பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

TN Bus Strike: தொழிலாளர்கள் போராட்டம்.. விழுப்புரத்தில் வழக்கம்போல பேருந்துகள் இயங்குகிறதா? - நிலவரம் என்ன?

மயிலாடுதுறை மாவட்டத்தில் 83 சதவீதம் பேருந்துங்கள் இயக்கம்: அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை!

இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் வழக்கம்போல பேருந்துகள் ஓடுமா என மக்கள் அச்சமடைந்தனர். அதேசமயம் தொ.மு.ச.,  ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை கொண்டு மக்களுக்கு சிரமமின்றி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கத்தை விட குறைவாக இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிமனை முன்பு பிற தொழிற்சங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

Bus strike: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்: கிளாம்பாக்கத்தில் நிலைமை என்ன?

மயிலாடுதுறை மாவட்டத்தில் 83 சதவீதம் பேருந்துங்கள் இயக்கம்: அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை!

மேலும் இயக்கப்படும் பேருந்தை தடுக்க நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பேருந்துகளில் மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் மாற்று பணியாளர்களை கொண்டு போதுவான பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு போக்குவரத்து பணிமனை கழகங்களிலும் நகரப் பேருந்து, புறநகரப் பேருந்து என 137 அரசு பேருந்துகள் உள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 83 சதவீதம் பேருந்துங்கள் இயக்கம்: அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை!

இதில், மயிலாடுதுறையில் 70 பேருந்துகளும், சீர்காழியில் 41 பேருந்துகளும், பொறையாரில் 26 பேருந்துகளும் உள்ளன. தொடர்ந்து மயிலாடுதுறை பணிமனையில் இருந்து இயக்கப்படும்  70 பேருந்துகளில் தற்போது  செல்ல வேண்டிய 69 பேருந்துகளில் 47 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், பொறையார், சீர்காழி பணிமனையில் உள்ள பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. சராசரியாக 83 சதவீத பேருந்துகள் இயக்கபட்டு உள்ளது. மேலும் அனைத்து பேருந்துகளும் இயக்கபடுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Bus Strike: போக்குவரத்துறை போராட்டத்திற்கு மத்தியில் இயக்கப்படும் பேருந்துகள்; தமிழ்நாடு முழுவதும் என்ன நிலை?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
Embed widget