மேலும் அறிய

Bus Strike: போக்குவரத்துறை போராட்டத்திற்கு மத்தியில் இயக்கப்படும் பேருந்துகள்; தமிழ்நாடு முழுவதும் என்ன நிலை?

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை தொடங்கிவிட்டதால் போதுமான பேருந்துகள் இயங்காததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போதுமான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 

இயக்கப்படும் பேருந்துகளின் விபரம்

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில் காலை முதல் 2,098 எம்.டி.சி பேருந்துகள் மாநகராட்சி முழுவதும் இயக்கப்பட்டுவருவதாக கோட்ட மேலாளர் அல்பி ஜான் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 700 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் 80 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் சேலம் கோட்டம்  மற்றும் விழுப்புரம் கோட்டம் ஆகிய இரு போக்குவரத்து பணிமனையில் உள்ளன. சேலம் கோட்டத்தில் மொத்தம் 64 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 44 புறநகர் பகுதிகளிலும் 20 நகர் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் ஆகும். இப்படியான நிலையில் புறநகருக்கு 11 பேருந்துகளும், நகர் பகுதிகளுக்கு 4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை 25 பேருந்துகள் இயக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 15 பேருந்துகள்தான் இயக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் விழுப்புரம் பணிமனையில் இருந்து இயல்பு நாட்களில் மொத்தம் 119 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 95 பேருந்துகள் புறநகர் பகுதிகளிலும் 24 பேருந்துகள் நகர் பகுதியில் இயக்கப்படுகின்றன. ஆனால் தற்போது புறநகர் பகுதிகளுக்கு 14 பேருந்துகளும் நகர் பகுதிகளுக்கு 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன.  மேலும் தற்போது வரை 48 பேருந்துகள் பணிமனையில் இருந்து சென்றிருக்க வேண்டும்.  ஆனால் 17 பேருந்துகள் மட்டுமே சென்றுள்ளது. இதனால் 31 பேருந்துகள் இயக்கப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

கரூரைப் பொறுத்தவரையில் இன்று காலை 06.30 மணி நிலவரப்படி கரூர் பேருந்து நிலையத்தில் 60 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றது. மேலும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இயங்கி வருகிறது. போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

திருவண்ணாமலையைப் பொறுத்தவரையில் இன்று காலை 07.00 மணி நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில்  உள்ள 10 பணிமனைகளில் இருந்தும் 95 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றது. மேலும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

 விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பில் , காலை நிலவரப்படி  1200 பேருந்துகள் இயங்க வேண்டிய சூழலில், தற்பொழுது வரை 950 க்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விழுப்புரம் போக்குவரத்து துறை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 6 மண்டலங்களில் 3054 புறநகர் பேருந்துகளும் கிராமபுறபேருந்துகள் 758 இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் கோட்டத்தில் 50 சதவிகித பேருந்துகள் பணிமனைகளில் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கிராமபுறங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கனிமசமான எண்ணிக்கையிலும் திருச்சி, மதுரை, சென்னை, கடலூர் போன்ற நகரங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. 

சேலம் கோட்டத்தில் இருந்து அனைத்து அரசு பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, கரூர், கோவை, திருச்சி, நாமக்கல், சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளானது இயக்கப்பட்டு வருகிறது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை செல்லக்கூடிய 144 பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.  பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget