Mayiladuthurai Power Shutdown (06.10.2025) மயிலாடுதுறை மின் தடை: நாளை பவர் கட் எங்கே? உங்க ஏரியா இருக்கா? முழு விவரம் இதோ!
Mayiladuthurai Power Shutdown 06.10.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (06.10.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மயிலாடுதுறை, மணக்குடி, குத்தாலம், கடலங்குடி மற்றும் மணல்மேடு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, மணக்குடி, குத்தாலம் மற்றும் கடலங்குடி மற்றும் சீர்காழி மின் கோட்டம் மணல்மேடு ஆகிய துணை மின் நிலையங்களில் வரும் 06.10.2025 நாளைய தினம் வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்கள் ரேணுகா மற்றும் மூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
மணக்குடி துணை மின் நிலையம்
* ஆலவேலி
* நத்தம்
* சாவடி
* உளுத்துக்குப்பை
* ஆனதாண்டவபுரம்
* மணக்குடி
* கீழிருப்பு
* மாப்படுகை
* சேமங்கலம்
* மொழையூர்
* வெப்பகுளம்
குத்தாலம் துணை மின் நிலையம்
* அரையபுரம்
கடலங்குடிதுணை மின் நிலையம்
* வாணாதிராஜபுரம்
* முருகமங்கலம்
* மாங்குடி
மயிலாடுதுறை துணை மின்நிலையம்
* ஆர்.கே.புரம்
* சித்தர் காடு
* மறையூர்
* அசிகாடு
* முருகன் தோட்டம்
* செங்குடி
* பட்டமங்கல தெரு
* கச்சேரி ரோடு
* புதிய பேருந்து நிலையம் ரோடு
* பெசன் நகர்
* டவுன்டேசன் ரோடு
* மேலவீதி
மணல்மேடு துணை மின்நிலையம்
* மணல்மேடு
* இராதா நல்லூர்
* கிழாய்
* கடலங்குடி
* திருமங்கலம்
* காளி
* இளந்தோப்பு
* பட்டவர்த்தி
* பண்ணிப்பள்ளம்
* சித்தமல்லி
* வடவாஞ்சார்
* திருச்சிற்றம்பலம்
* திருவாளர்ப்புத்தூர்
* வரதம்பட்டு
* நமச்சிவாயபுரம்
* ஆத்தூர்
* நாராயணமங்கலம்
* பாண்டூர்
ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























