மது வழங்க தாமதம்...ஆத்திரத்தில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது
மயிலாடுதுறை அருகே அரசு மதுபான கடையில் மது கொடுக்காமல் தாமதப்படுத்தியதாக கூறி டாஸ்மாக் ஊழியர்களை கடைக்குள் வைத்து மூடி கேமராக்களை உடைத்து மிரட்டிய ராணுவ வீரர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
![மது வழங்க தாமதம்...ஆத்திரத்தில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது Mayiladuthurai manalmedu tasmac shop issue military man arrested - TNN மது வழங்க தாமதம்...ஆத்திரத்தில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/3e170ef1058f4b640f86ca47234fc4b01710309484664733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டாஸ்மாக் கடை பிரச்சினை: மயிலாடுதுறை அருகே அரசு மதுபான கடையில் மது கொடுக்காமல் தாமதப்படுத்தியதாக கூறி டாஸ்மாக் ஊழியர்களை கடைக்குள் வைத்து மூடி கேமராக்களை உடைத்து மிரட்டிய ராணுவ வீரர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் என்பவரின் மகன் 54 வயதான செல்வம். இவர் பட்டவர்த்தி இளந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
டாஸ்மாக் கடைக்கு நண்பர்களுடன் வந்த ராணுவ வீரர்.
இந்நிலையில் இளந்தோப்பு டாஸ்மாக் கடைக்கு வந்த திருப்புன்கூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் 27 வயதான விமல் ராஜ், ஆர்மி சப்ளை சோர்சில் ஏஎஸ்ஐ ஆக பணியாற்றும் சேத்தூர் சந்திரசேகர் என்பவரின் 32 வயதான மகன் பீமாராவ் மற்றும் அவர் நண்பர் திருப்புன்கூர் ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அருண் ஆகியோர் மதுபானம் கேட்டுள்ளனர். கடையில் ஆடிட்டிங் நடந்ததால் கணக்கு கொடுத்துவிட்டு மதுபானம் தருவதாகவும் சிறிது நேரம் காத்திருங்கள் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது
இதனால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர் உள்ளிட்ட மூவரும் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடையின் கதவுகளை மூடி அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து இது குறித்த கடையில் சூப்பர்வைசர் மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மணல்மேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அரசு மதுபான கடையில் ரகளையில் ஈடுபட்ட விமல் ராஜ், பீமா ராவ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருணை தேடி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)