மயிலாடுதுறை மின்துறையில் தொடரும் அவலம் - முற்றுப்புள்ளி வைக்குமா அரசு?
மயிலாடுதுறை அருகே மின்வாரிய அலுவலகத்தில் பணி நேரத்தில் மதுபோதையில் ஊழியர்கள் படுத்துறங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குத்தாலம் அருகே இரவு மின் தடை ஏற்பட்ட நிலையில், குத்தாலம் துணைமின் நிலையத்தில் மின் இணைப்பை சரி செய்யாமல் ஊழியர்கள் மதுபோதையில் உறங்கியதாக குற்றம்சாட்டி எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குத்தாலம் துணை மின்நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து குத்தாலம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குத்தாலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வராமல் இருந்துள்ளது.
அலுவலகத்தில் உறக்கம்
அதனை அடுத்து குத்தாலம் பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் பலமுறை கால் செய்தும் அவர்கள் பொதுமக்களின் அழைப்பை ஏற்கவில்லை. இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் குத்தாலம் துணை மின் நிலையத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இரண்டு ஊழியர்கள் ஆடை நழுவியது கூட தெரியாமல் அலுவலகத்தில் உள்ளே படுத்து உறங்கியுள்ளனர். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊழியர்களை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, குத்தாலம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்நிறுத்தம் குறித்து தெரிவித்து, அதனை சரி செய்ய கூறியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவும் வைரல் வீடியோ
மேலும் மின்வாரிய ஊழியர்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளனர் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி ஊழியர்கள் மது போதையில் இருந்ததாக வீடியோ எடுத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து மின்வாரிய வட்டாரத்தில் கேட்டபோது, இதுகுறித்து கேட்டபோது மின் பாதை ஆய்வாளர் கண்ணன், கேங்மேன் கங்காதரன் ஆகியோருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கண்டனம்
மேலும் கவனமாக கையாளக்கூடிய மின்சாரத்தை குடிபோதையில் ஊழியர்கள் கையாள்வதால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் மின்வாரியத்துறை அதிகாரிகள் இது போன்ற நிகழ்வுகளை சரியான முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்வாரியத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாகவும், அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஊழியர்கள் தொடர்ந்து பீங்கானுக்கு பதில் மின் கம்பத்தில் மது பாட்டில்களை வைத்து மின்கம்பியினை கட்டுவதும்,
LIK First Single :வாவ்! மூச்சே விடாமல் பாடி அசத்திய அனிருத்... எல்.ஐ.கே படத்தின் தீமா பாடல் ப்ரோமோ
மூங்கில் குச்சிகளை வைத்து மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று இணையாமல் கட்டுவதும், தெரு நடுவில் மின்கம்பம் நட்டு வைத்தது என மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் இதுபோன்று நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அரசு இதனை கண்டும் காணாமல் இருக்காமல், மக்களின் மிகவும் அத்தியாவசியமான ஒன்றான, அனைத்து துறைகளும் பயன்படும் மின்சார பயன்பாட்டில் இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.