LIK First Single :வாவ்! மூச்சே விடாமல் பாடி அசத்திய அனிருத்... எல்.ஐ.கே படத்தின் தீமா பாடல் ப்ரோமோ
LIK First Single : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே படத்தின் முதல் பாடலான தீமா நாளை அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது
அனிருத் பிறந்தநாள்
திரைத்துறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு இசையமைப்பாளர் உச்சத்திற்கு செல்வார். இளையராஜா , ஏ.ஆர் ரஹ்மான் , யுவன் ஷங்கர் ராஜா , ஹாரிஸ் ஜெயராஜ் , தேவா , வித்யாசாகர் என ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காலத்தில் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். தற்சமயம் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி , தெலுங்கு என அனைத்து திரைத்துறையிலும் உச்சத்தில் இருப்பவர் அனிருத். ஒரே பாடலை மூன்று வெவ்வேற மொழிகளில் போட்டாலும் மூன்று பாடல்களும் ஹிட் அடிக்கின்றன. ரஜினி , கமல் , ஷாருக் கான் , ஜூனியர் என்.டி, ஆர் , விஜய் என அனைத்து மெகா ஸ்டார்களின் படங்களுக்கும் ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்து இசையமைத்து வருகிறார். தற்போதையை நிலைப்படி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய இசையமைப்பாளர்களில் அனிருத் முதலிடத்தில் உள்ளார். கோலிவுட்டின் ராக்ஸ்டார் என்றழைக்கப்படும் அனிருத் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனை முன்னிட்டு அவர் இசையமைத்திருக்கும் எல்.ஐ.கே படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது
எல்.ஐ.கே
கோமாளி , லவ் டுடே ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே படத்தில் நடித்துள்ளார். போடா போடி , நானும் ரவுடி தான் , காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களுக்குப் பின் எல்.ஐ.கே படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. க்ரித்தி ஷெட்டி , யோகிபாபு , எஸ்.ஜே.சூர்யா, சீமான் , ஆனந்த ராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
எல்.ஐ.கே முதல் பாடல்
. @VigneshShivN asked me for a breathless verse..
— Anirudh Ravichander (@anirudhofficial) October 15, 2024
We tried our best 😊#Dheema full video song out tomo morn at 10.06am 🫡 Love you all ❤️@pradeeponelife @IamKrithiShetty 🏆#LIK #LIKFirstSingle pic.twitter.com/8OLWEZmZTD
பொதுவாக விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் இசையில் உருவாகும் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. நீயும் நானும் , கண்ணான கண்ணே , எனை மாற்றும் காதலே என நானும் ரவுடி தான் படத்தின் மொத்த ஆல்பமும் ஹிட் அடித்தது. அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரெண்டு காதல் பாடலும் பெரியளவில் ரீச் ஆனது. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் தீமா பாடலும் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பாடலில் எஸ்.பி.பி ஸ்டைடில் மூச்சே விடாமல் அனிருத் ஒரு பெரிய சரணத்தை பாடியுள்ளார் என்பது தான் இந்த பாட்டின் சிறப்பு.