"கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளிகளுக்கு கடன் மேளா" - எங்கே? எப்போது? முழு விபரம் உள்ளே...!
கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டும் வீடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவினங்களுக்கு வங்கி கடனுக்கு பெறலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழ்நாடு அரசால் 2024 - 2025 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 8 இலட்சம் குடிசை வாழ் மக்களுக்கு தலா 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டித்தரவும், அதற்கு முதற்கட்டமாக 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித்தர அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
Fengal Cyclone Updates: இன்று இரவு எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்? வானிலை புது அப்டேட்.!
வங்கி கடன் மேளா
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள், மேற்படி திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகமான செலவுத் தொகையினை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற ஏதுவாக வருகின்ற டிசம்பர் 02 -ம் தேதி கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளிகளுக்கென கடன் மேளா நடைபெற உள்ளது.
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
தேவையான ஆவணங்கள்
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதியனவர்கள், வீடுகட்ட அனுமதிக்கப்பட்டுள்ள மனையின் பட்டா, நில உரிமைச்சான்று மற்றும் மனையின் மூலப்பத்திரம். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் வீடு ஒதுக்கீட்டிற்கான அசல் ஆணை KYC ஆவணங்கள், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருப்பின் மாற்றுத்திறனாளி சான்றிதழ், குடும்ப அட்டை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்கிட வேண்டும், வருமான சான்றிதழ், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை பிணையமாக அளிக்க வேண்டும்.
கணைய புற்றுநோய்; உயிர்பிழைப்பு விகிதம் 5-10% தான் - மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்
கடன் உச்ச வரம்
கடன் உச்ச வரம்பாக பயனாளிக்கு 1 லட்சம் ரூபாய் வரை வீட்டு வசதி கடனுக்குரிய வட்டி விகிதத்தின்படி வழங்கப்படும். கடன் திரும்ப செலுத்தும் கால அளவு ஐந்தாண்டுகள் ஆகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் மயிலாடுதுறை மெயின் கிளை குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் கொள்ளிடம் கிளைகளில் 02.12.2024 தேதியில் நடத்தப்பெறும் கடன் மேளாவில் கலந்துக்கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்கள்.
திட்டத்திற்கான தகுதிகள்
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பத்தாரர் குறைந்தபட்சமாக 360 சதுர அடி நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும், பயனாளர் குடிசை வீடுகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். அத்துடன் கான்கிரீட் மற்றும் மண் சுவர் மூலமாக வீடு கட்டியிருப்பவர்கள் இத்திட்டத்தின் பலனை பெற முடியாது. அத்துடன் விண்ணப்பத்தாரர் சொந்தமாக பட்டா நிலம் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.