Fengal Cyclone Updates: இன்று இரவு எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்? வானிலை புது அப்டேட்.!
Fengal Cyclone Updates: இன்று இரவு 11 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலானது, இன்று மாலையே கரையை கடக்கும் என வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில் இன்று இரவு 7 மணிவரையில் எங்கெல்லாம் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் மற்றும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என பார்ப்போம்.
ரெட் அலர்ட்:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரையில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்:
அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு, கோவை, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 30, 2024
இன்று காலை 8.30 மணி வரையிலிருந்து மதியம் 1 மணி வரையிலான கால அளவில் பெய்த மழை அளவானது,சென்னையை பொறுத்தமட்டில்
எண்ணூர்- 13 செ.மீ
மீனம்பாக்கம் : 10.2 செ.மீ
கொளப்பாக்கம் : 10.25 செ.மீ
நுங்கம்பாக்கம் : 9.70 செ.மீ
நந்தனம் : 8.20 செ.மீ
பல இடங்களில் 7.0 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
30-11-2024: இன்றைய வானிலை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர். அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
01-12-2024 நாளைய வானிலை:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.