மேலும் அறிய
Advertisement
கணைய புற்றுநோய்; உயிர்பிழைப்பு விகிதம் 5-10% தான் - மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்
ஆம்புலரி புற்றுநோய்க்கு சிகிச்சையில் குணம் பெற்று உயிர்வாழும் விகிதம் 50%-க்கும் அதிகமாக இருக்கிறது. ஆனால், கணைய புற்றுநோய் பொறுத்தவரை உயிர்பிழைப்பு விகிதம் 5-10% என்ற அளவிலேயே இருக்கிறது.
கணைய புற்றுநோயாளிகளுள் 20% குறைவான நபர்களே சரியான நேரத்திற்குள் சிகிச்சைக்கு வருகின்றனர். 2021ன் படி, 5 வருட உயிர்வாழ்வு விகிதம் 12% ஆக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கணையப் புற்றுநோய்
கணைய புற்றுநோய் என்பது, புற்றுநோய்களுள் அதிக ஆபத்தானவைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. மலக்குடல் புற்றுநோயில் உயிர்பிழைப்பு விகிதம் 40-50% ஆக இருக்கிற நிலையில், கணைய புற்றுநோயாளிகள் பாதிப்பிற்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு உயிர்வாழும் விகிதம் 12% ஆக இருக்கிறது. உலகளவில் 4-வது மிகப்பொதுவான புற்றுநோயாக ஏற்கனவே அறியப்படுகிற கணைய புற்றுநோய் நேர்வுகள் இந்தியாவிலும் கூட தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் தினமும் 1200 பேர் கணையப் புற்றுநோய் கண்டறியப்படுகின்றனர். கணைய புற்றுநோய் மீதான விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும் இத்தருணத்தில் மதுரை, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் கவலையளிக்கும் இந்த விவரங்களை தெரிவித்தனர்.
காலம் கடந்து சிகிச்சை
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி கூறியதாவது: சிகிச்சையளிப்பதற்கு கணைய புற்றுநோயை மிகவும் கடினமானதாக ஆக்கும் ஒரு முக்கியமான காரணியாக இருப்பது இந்தியாவில் வெறும் 10-20% நோயாளிகளே உகந்த நேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும் என்று தேடி மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். எஞ்சிய நபர்களோ, எந்த வகையான சிகிச்சையும் பலனளிக்காத நேரத்தில் காலம் கடந்து மிகத்தாமதமாக சிகிச்சைக்கு வருகின்றனர்.
இரு வகையான கணைய புற்றுநோய்
எனினும், இந்தியாவிற்கு பொறுத்தவரை ஆறுதல் அளிக்கும் மற்றொரு விஷயமும் இருக்கிறது. கணைய புற்றுநோயில் இரு வகைகள் இருக்கின்றன. முதலாவது, கணையத்தில் உருவாகின்ற புற்றுநோய், இரண்டாவது, சிறுகுடலில் கணைய மற்றும் பித்தநாள குழாய் சந்திக்கிற சிறுகுடலில் இருக்கும் சிறிய திறப்பான வேட்டரின் ஆம்புலாவில் உருவாகும் புற்றுநோயாகும். மேற்கத்திய நாடுகளில் 80% கணைய புற்றுநோய்கள், கணையத்தோடு நேரடி தொடர்புடையதாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இதற்கு நேர்மாறாக 80% பாதிப்புகள் ஆம்புலரி புற்றுநோயாக தோன்றி கணையத்திற்கு பரவுகின்றன. இத்தகைய போக்கு இந்தியா முழுவதிலும் காணப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக ஆம்புலரி கணைய புற்றுநோயில் சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைக்கும் விகிதம், கணைய புற்றுநோயோடு ஒப்பிடுகையில் அதிகமாகவே இருக்கிறது. கணைய புற்றுநோயில் இது 5-10% இருக்கும் நிலையில் ஆம்புலரி கணைய புற்றுநோயில் 50%-க்கும் அதிகமாக உயிர்பிழைப்பு விகிதம் காணப்படுகிறது என்று விளக்கமளித்தார்.
குடல் இரைப்பை அறுவைசிகிச்சை
இந்தியாவில் கணைய புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். மோகன் பேசுகையில், “ஆபத்து காரணிகளில் புகைபிடித்தல், அதிக மது அருந்துதல், உடல் பருமன், 65 வயதுக்கு மேற்பட்ட வயது, குடும்ப வரலாறு, மேம்பட்ட மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு ஆகியவை அடங்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள் போன்ற மேற்கத்திய வாழ்க்கைமுறை சார்ந்த உணவுப்பழக்கங்கள் இந்தியாவிலும் கணைய புற்றுநோயை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புகைப்பிடித்தலும், மதுபானம் அருந்தலும் இப்புற்றுநோய்க்கு குறிப்பிடத்தக்க இடர்காரணிகளாக இருந்து வருகின்றன,” என்று குறிப்பிட்டார்.
அறிகுறிகள் இருக்காது
புற்றுநோய் துறையின் தலைவர் கிருஷ்ணகுமார் ரத்னம் கூறுகையில், “கணைய புற்றுநோயானது, கணிசமாக வளர்ந்து முதிர்ச்சியடையும் வரை பெரும்பாலும் அறிகுறிகள் வெளிப்படுத்தாமலேயே இருக்கும். காரணம் விளக்கமுடியாதவாறு உடல் எடை குறைதல், அடிவயிற்று வலி, மஞ்சள் காமாலை மற்றும் புதியதாக நீரிழிவு தோன்றுவது போன்ற பொதுவான அறிகுறிகள் நோய் முற்றிய நிலைகளிலேயே வெளிப்படுகின்றன. இருப்பினும், இந்த நோய்க்கு சிகிச்சை உரிய நேரத்தில் நடவடிக்கையும், உரிய சிகிச்சையும் மேற்கொள்வது பயனளிப்பதாக இருக்கும்” என்றார்.
டாக்டர். அழகம்மை பேசுகையில், “கணையத்தில் வளர்ந்து முதிர்ச்சியடைந்திருக்கிற ஆனால், உடலின் பிற பகுதிகளுக்கு பரவாத புற்றுநோய்க்கட்டிகள், அறுவைசிகிச்சைக்கு முந்தைய கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சைக்கு நன்றாக பதில்வினையாற்றுகின்றன என புதிய ஆய்வுகள் காட்டியிருக்கின்றன. நோயாளிகள் சிகிச்சையின் மூலம் உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் இது அதிகரிக்கக்கூடும். சிடி ஸ்கேன்கள், எம்ஆர்ஐ மற்றும் எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டு (EUS) போன்ற மேம்பட்ட நோயறிதல் உத்திகள், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததோடு ஒப்பிடுகையில் முன்னதாகவே நோய் பாதிப்பு கண்டறியப்படுவதை இப்போது ஏதுவாக்கியிருக்கின்றன” என்று கூறினார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion