மேலும் அறிய

தீபாவளிக்கு வெடி வெடிக்கும் ஆசை இருந்த அதை மறந்துடுங்க - ஏன் தெரியுமா?

கொள்ளிடம் அருகே 100 ஆண்டுகளை கடந்து வெளவால்களுக்காக தீபாவளி மற்றும் இன்றி ஆண்டு முழுவதும் வெடி வெடிக்காத கிராம மக்களின் செயல் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கொள்ளிடம் அருகே 100 ஆண்டுகளை கடந்து பறவைகள் முற்றும் வெளவால்களுக்காக தீபாவளி மற்றும் இன்றி ஆண்டு முழுவதும் வெடி வெடிக்காத கிராம மக்களின் செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

வெளியூர் நபர்களுக்கு அனுமதி மறுப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பெரம்பூர் கிராமம். விவசாயம் நிறைந்த இக்கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலமரம் ஒன்றில் மரத்தில் பல்லாயிரகணக்கான வெளவால்கள் வாழ்ந்து வருகின்றன. கிராமத்தின் நடுவே வயல்வெளியில் அமைந்துள்ள ஆலமரத்தில் வெளவால்கள் வசிப்பதால் இப்பகுதியை வெளவாளடி எனவும் அழைக்கின்றனர். இந்த வெளவால்கள் வசிக்கும் பகுதிக்கு கிராமமக்கள் அனுமதியின்றி வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாது. 

தீபாவளிக்கு வெடி வெடிக்கும் ஆசை இருந்த அதை மறந்துடுங்க - ஏன் தெரியுமா?

இளைஞர்கள் கொண்ட வேட்டை தடுப்பு குழு

வெளவால்களை பாதுகாக்க இளைஞர்கள் கொண்ட வேட்டை தடுப்பு குழு ஒன்றை அமைத்து யாரும் வெளவால்களை இறைச்சிக்காவும் இன்பிற தேவைகளுக்காக வேட்டை ஆடாத வண்ணம் மூன்று தலைமுறைகளாக வெளவால்களை பெரம்பூர் கிராமமக்கள் பாதுகாத்து வருகிறனர். அதுமட்டுமின்றி நாடுமுழுவதும் தீபாவளி அன்று வெடிவெடித்து கொண்டாட கூடிய நிலையில் இங்கு மட்டும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதையும் தடை செய்துள்ளனர். தீபாவளி மட்டும் இல்லாமல் இந்த ஊரில் திருவிழா, இறப்பு உள்ளிட்ட துக்க நிகழ்வு என ஆண்டின் 365 நாட்களும் பட்டாசு வெடிப்பதில்லை.

தீபாவளிக்கு வெடி வெடிக்கும் ஆசை இருந்த அதை மறந்துடுங்க - ஏன் தெரியுமா?

பட்டாசு வெடிக்க வெளியூர் செல்லும் மக்கள் 

பட்டாசு சத்ததால் வெளவால்கள் அச்சமடையும் என்பதால் இந்த கட்டுபாடு பல ஆண்டுகளாக உள்ளது. வழக்கம் போல் இந்த ஆண்டும் வெளவால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை வழக்கம் போல இந்தாண்டும் கொண்டாட முடிவு செய்துள்ளனர் கிராமமக்கள். வெளவால்களை தங்கள் கிராமத்தை காக்கும் தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர். சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பட்டாசு வெடிக்க ஆசைபட்டால் கூட அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று வயல் பகுதியில்தான் வெடிக்க வேண்டும் எனவும், பெரம்பூர் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்க ஊரில் திருமணம் செய்யும் ஆண்களுக்கும் தங்கள் கிராமத்தின் கட்டுப்பாடு குறித்து முன்னதாகவே தெரிவித்து விடுவதாகவும், இதனால் அவர்களும் தலை தீபாவளி கொண்டாடத்தின் போது பட்டாசு வெடிப்பதை தவிர்த்து விடுகின்றனர். 

தீபாவளிக்கு வெடி வெடிக்கும் ஆசை இருந்த அதை மறந்துடுங்க - ஏன் தெரியுமா?

படையெடுக்கும் பறவைகள் 

இதேபோன்று பசுமை நிறைந்து காணப்படும் இக்கிராமத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய நாட்டு பறவை இனங்களான வக்கா, பூ நாரை, நீர் காக்கா உள்ளிட்டவை பல்வேறு பறவை இனங்கள் இக்கிராமத்துக்கு வர தொடங்கியது. அக்டோபர் மாதம் வரும் பறவைகள், மார்ச் மாதம் வரை தங்கி இனப்பெருக்கத்திற்கு பின் தன் குஞ்சுகளுடன் தாயகம் திரும்புவது வழக்கம். ஆனால் பெரம்பூர் கிராமத்தின் பசுமை சூழலால் கவரப்பட்ட பறவைகள் தற்போது அங்கேயே நிரந்தரமாக கூடுகள் அமைத்து இங்கேயே தங்கிவிட்டன.

தீபாவளிக்கு வெடி வெடிக்கும் ஆசை இருந்த அதை மறந்துடுங்க - ஏன் தெரியுமா?

பறவைகள் சரணாலயம் அமைக்க கோரிக்கை 

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் நூற்றுக்கணக்கில் பறவைகள் தங்கியுள்ளது. பறவைகளை எந்த இடையூரும் செய்யாமல் பாதுகாக்கும் கிராம மக்கள் வெளியாட்கள் வேட்டையாடுவதை தடுக்க வேட்டை தடுப்பு குழு அமைத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது வயல்வெளிகளில் ஆயிரகணக்கான பறவைகள் உலா வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இப்பறவைகளை பாதுகாக்க இப்பகுதியில் ஒர் சரணாலையம் அமைக்க வேண்டும், சாலை வசதிகள் செய்து தரவேண்டும் என அரசுக்கு பெரம்பூர் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget