(Source: ECI/ABP News/ABP Majha)
காங்கிரஸ் எம்.எல்.ஏ.விற்கு செருப்பை எடுத்துக்கொடுத்த செவிலியர் - வைரலாகும் வீடியோ
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவிற்கு அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் கையால் காலணியை எடுத்து கொடுத்த சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
மயிலாடுதுறை அருகே அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற காங்கிரஸ் எம்எல்ஏவிற்கு அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் கையால் காலணியை எடுத்து கொடுத்த சம்பவம் தொடர்பாக வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
குத்தாலம் அரசு மருத்துவமனை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் குத்தாலம் தாலுக்கா சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மக்கள் தங்களின் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுதல், தொழில்நுட்ப கருவிகள் என பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எம்எல்ஏ ஆய்வு
இந்நிலையில் அந்த மருத்துவமனையில் நேற்று மாலை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) ராஜகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், மேலும் மருத்துவமனையில் தேவைகள் குறித்தும் மருத்துவர்கள் மட்டும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.
காலணி வீடியோ
அப்போது மருத்துவமனையில் ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் அறுவை சிகிச்சை அரங்கிற்கு செல்லும் முன்பு நோய் தொற்று ஏற்படாத வண்ணம் தனது காலணியை அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு வெளியே கழட்டிவிட்டு வெறும் காலுடன் உள்ளே சென்றார். அப்போது அறுவை சிகிச்சை அரங்கத்தில் பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக வைத்திருந்த காலணியை அம்மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் எடுத்து சட்டமன்ற உறுப்பினர் கால் அருகே வைக்கிறார். இந்த ஆய்வு குறித்து வீடியோ ராஜகுமார் சட்டமன்ற உறுப்பினரின் பேஸ்புக் தளத்தில் நேரலை செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த செவிலியர் காலனியை எடுத்து சட்டமன்ற உறுப்பினருக்கு கொடுப்பதை மட்டும் எடிட் செய்து சமூக வலைதளங்களில் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக பரப்பப்பட்டு வருகிறது.
எச்.ராஜா கண்டனம்
மேலும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா அந்த வீடியோவினை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து, "தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாத பூஜை செய்து அவர்களை கௌரவிக்கும் காணொளியை பார்த்திருக்கிறோம். நாம் அனைவரும் பள்ளி குழந்தைகளுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு நற்பண்புகள் குறித்து உபதேசிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.
தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாத பூஜை செய்து அவர்களை கெளரவிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். பள்ளி குழந்தைகளுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு நற்பண்புகள் குறித்து உபதேசிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவரை தனது காலணியை எடுத்து தனது கால் பாதத்தின் அருகில் வைக்க வைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மோசமான செயலை பாருங்கள்..!!
தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாத பூஜை செய்து அவர்களை கெளரவிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.
பள்ளி குழந்தைகளுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு நற்பண்புகள் குறித்து உபதேசிக்கும்… pic.twitter.com/Aps6o0wtKw
">
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவருமான திரு.ராஜ்குமார் MLA அவர்கள் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவரை தனது செருப்பை எடுக்க வைத்து தனது கால் பாதத்தின் அருகில் வைக்கச் செய்த வேதனைக்குரிய நிகழ்வைத்தான் இந்த காணொளியில் நாம் அனைவரும் பார்க்கிறோம்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்ற மகாகவி பாரதியார் பிறந்த மண்ணில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று திருமதி.சோனியாகாந்தி அவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கற்றுத் தரவில்லை போலும்! என பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ விளக்கம்
எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதற்காக இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுகின்றனர். மருத்துவமனை வளாகத்திற்குள் அதுவும் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் செல்லும் முன்பு எனது காலணியை நான் வெளியில் விட்டுவிட்டு சென்ற நிலையில், அங்குள்ள செவிலியர் அறுவை சிகிச்சை அரங்கிற்கு பயன்படுத்தக்கூடிய காலணியை நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் அப்போதே அதற்கு மறுப்பு தெரிவித்தேன். இருந்த போதிலும் எதிர்பாராமல் நடைபெற்ற அந்த செயல் எனது காலணியை செவிலியர் எனக்கு எடுத்து கொடுத்ததாக தவறாக சித்தரித்து, குறைந்த அரசியல் செய்கின்றனர் என்றார்.