பெரியார் குறித்து உண்மையை பேசிய சீமானுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன் - எச்.ராஜா
சீமானுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரியார் குறித்து உண்மையை பேசிய சீமானுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாக மயிலாடுதுறையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்

சீமானுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரியார் குறித்து உண்மையை பேசிய சீமானுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாக மயிலாடுதுறையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் எச்.ராஜா
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவிற்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; பாரத தேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் இல்லை என்று அவசர அவசரமாக சட்ட அமைச்சர் திமுககாரன் இல்லை என்கிறார். ஆனால் ஆர்.எஸ்.பாரதி நம்ம பையன்தான் என்று கூறும் நிலையில், திமுகவின் 75 ஆவது ஆண்டு விழா ஏற்பாடுகளின் மேற்பார்வையை ஞானசேகரன் செய்முடியுமா? தமிழக அரசு காவல்துறையை துஷ்பிரயோகம் செய்கிறது.
வரம்பு மீறி செயல்பாடும் கமிஷனர் அருண்
இந்த வழக்கில் சென்னை கமிஷனர் அருண் வரம்பு மீறி திமுகவின் கரை வேட்டி கட்டாத உறுப்பினர் மாதிரி செயல்பட்டுள்ளது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அந்த சார் சொல்வது மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று கல்லூரி மாணவியிடம் ஞானசேகரன் குறிப்பிட்டுள்ளதாக புகார் மனுவில் தெரிவித்துள்ள அந்த மாசு படிந்த சார் யார் என்று மக்களுக்கு தெரிய வேண்டும்.
உரிமை மீறல் பிரச்சனை
திமுக அரசு நாகரிமானவர்கள் என்று கூறிக்கொண்டால், ஆளுநர் டவுசரை கிழிப்பேன் என்று சொன்னவரை கட்சியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும். செய்யாமல் கேவலமான அரசாக தமிழக அரசு உள்ளது. ஆளுநரின் அரசு நிகழ்ச்சியில் துவக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். அதை செய்யாமல் தேச விரோத சக்தியாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவு கவர்னரை தவறாக பேசிய அனைவர் மீதும் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வர வேண்டும்.
பெரியார் குறித்து விமர்சனம் செய்துள்ளேன்
திமுகவினர் எல்லாம் பெரியாரின் கூட்டம். தந்தை பெரியார் அநாகரிகமாக பேசினாரா? நடந்து கொண்டாரா? இல்லையா? என்று கேள்வி எழுப்பிய எச்.ராஜா பெரியார் தேசத்துரோகி பட்டியல் சமுதாயத்திற்கு எதிரானவர் தமிழ் தேச விரோதி பெண்களுக்கு எதிரான மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதற்கு ஆதாரம் உள்ளது. பெரியார் குறித்து விமர்சனம் செய்து எனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளேன்.
சீமான் பேசியது அத்தனையும் உண்மை
சீமானின் பல கருத்துகள் குறித்து எனக்கு உடன்பாடு கிடையாது. பெரியார் குறித்து சீமான் கூறிய கருதிற்காக கல்லை கொண்டு அடிப்பீர்களா? வெள்ளையன் வெளியேறினால் விஞ்ஞானம் வெளியேறிவிடும் என்று காந்தியடிகளுக்கு எதிராக தீர்மானம் போட்ட திகவினர் தேசவிரோதிகள். சீமான் பேசியது அத்தனையும் உண்மை. பெரியாரை பற்றி சீமான பேசியதை விட பேரறிஞர் அண்ணா பெரியாரை மோசமாக பேசியுள்ளார். கன்னிமரா நூலகம் சில ஆண்டுகளுக்கு முன் எரிக்கப்பட்டது. கருணாநிதி முதல்வராக வந்தபிறகு பெரியாரின் உண்மைகளை மறைப்பதற்காக பத்திரிக்கைகளில் வெளிவந்ததை அழிக்கிறதுக்காக நடந்தது என்று சொல்கிறார்கள். ஈவேரா என்பது வெங்காயம்தான். வெங்காயத்தை ஒவ்வொருதோழாக உரித்தால் ஒன்றும் இருக்காது. ஆதாரத்தை கொடு என்று கேட்கிறார்கள் ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சத்யராஜ் ஒரு மோசடி பேர்வழி
பெரியார் குறித்து ஜவர்ஹலால் நேரு கூறிய பக்கத்தையே கிழித்தள்ளனர் என்றார். என்னோட வார்த்தை இல்லை பெரியாரின் வார்த்தை திமுகவினர் தேர்தலில் ஓட்டு வேண்டும் என்றால் வீட்டு பெண்களை விட்டுவிடுவார்கள் என்று பெரியார் சொல்லியுள்ளார் என்றார். நடிகர் சத்யராஜ் திக பேசுவார், பெரியார் படத்தில் நடிப்பார். மகனுக்கு கல்யாணம் சனாதான முறைப்படி கோவிலில் நடத்துவார். வெட்கமாக இல்லையா சத்யராஜ் ஒரு மோசடி பேர்வழி என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

