"திமுகவிற்கு எதிராக அனைத்து தொகுதிகளிலும் போட்டி” அதிரடி முடிவெடுத்த விவசாயிகள்.. காரணம் இதுதான்!
விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தராமல் தொடர்ந்து வஞ்சித்து வந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விவசாயிகள் போட்டியிட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையில் பாதிக்கப்பட்ட 980 ஹெக்டேர் சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு 10 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்தும் 8 மாத கடந்தும் இதுநாள் வரை வழங்கவில்லை என விவசாயிகள் அமைச்சர் மெய்யநாதனிடம் புகார் அளித்துள்ளனர்.
மாவட்டத்தில் 16 கிராமத்திற்கு மட்டும் பயிர் காப்பீடு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டில் விவசாயிகள் 1 லட்சத்து 79 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்தனர். பயிர் காப்பிட்டு தொகையாக ஒரு ஏக்கருக்கு 570 ரூபாய் வீதம் பிரிமியம் தொகை 9 கோடியே 98 லட்சம் காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் 16 கிராமத்திற்கு மட்டும் பயிர் காப்பீடு ஒரு ஏக்கருக்கு 500, 1000, 2000 என குறைவான தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது. ஒருசில கிராமங்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
”முதல்வரை சுற்றி இருக்கும் அமைச்சர்களுக்கு சமூக நீதி பற்றி தெரியுமா..?” விளாசிய அன்புமணி..!
அதிர்ச்சியடைந்த விவசாயிகள்
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்டபணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து புகார் அளித்துள்ளனர். அப்போது விவசாயிகள் அமைச்சரிடம் கூறுகையில்; பயிர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளை வஞ்சிப்பதாகவும், அதற்கு வேளாண்துறை அதிகாரிகள் துணைபோவதாகவும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு 20 சதவீதம் வழங்க வேண்டும், இல்லை என்றால் காப்பீடு எங்களுக்கு தேவையில்லை.
Cucumber Water: உடல் எடையை குறைக்க வெள்ளரி நீர்.. நிபுணர்கள் சொல்வது என்ன?
தவறாக கணக்கெடுத்த வேளாண் அதிகாரிகள்
பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா மாநிலத்தில் ஆண்டுகளுக்கு குறுவை, சம்பா சாகுபடிக்கு தாலா 10 ஆயிரம் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் வழங்குவது போல் தமிழக விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கடந்த ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையில் 30 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்ட நிலையில், 970 ஹேக்டேர் மட்டுமே பாதிக்கப்பட்டது என வேளாண் அதிகாரிகள் தவறாக கணக்கெடுத்து அரசிடம் வழங்கினர். அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். ஆனால் 8 மாத காலம் கடந்தும் இழப்பீடு தொகை இதுவரை வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறனர்.
சட்டமன்ற தேர்தல் விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காப்பீடு என்ற பெயரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்ளையடித்து கொண்டுள்ளனர். இன்சூரன்ஸ் தொகை விவசாயிகளுக்கு வழங்குவது கிடையாது இதனை கவனத்தில் எடுத்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை கேட்ட அமைச்சர் மெய்யநாதன் விவசாயிகளின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதற்கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், விவசாயிகள் கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில் வரும் சட்டமன்ற தேர்தல் விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தலில் களம் காண்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.