Cucumber Water: உடல் எடையை குறைக்க வெள்ளரி நீர்.. நிபுணர்கள் சொல்வது என்ன?
Cucumber Water: உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காய் தண்ணீர் குடிப்பதன் நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.
உடல் எடையை குறைக்க வேண்டும், தொப்பை குறைக்க வேண்டும் என்பவர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் சில எளிதான பரிந்துரைகளாக குறிப்பிட்டுள்ளதை இங்கே காணலாம்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் உணவு முறைகளில் மாற்றங்களை செய்ய வேண்டும். அதிக கெட்ட கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள், ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் ஆகியவற்றை தவிக்க வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த நிறைய உணவுகள் இருந்தாலும், வெள்ளரிக்காய் தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள்.
வெள்ளரிக்காய் நன்மைகள்:
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடை எடை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. உடலிலுள்ள நச்சுக்களை நீக்கும் பணியை சிறப்பாக செய்கிறது வெள்ளரிக்காய்.
வெள்ளரிக்காய் ஜூஸ் அல்லது தண்ணீரில் வெள்ளரிக்காய் சேர்த்து அதை குடிப்பது உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களுக்கு நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
செரிமான ஆற்றல் மேம்படும்:
வெள்ளரிக்காயில் உள்ள erepsin என்ற பொருள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால் அது உடல் எடையை நிர்வகிக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்தது:
வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களின் பசிக்கு ஏற்றது. காலை உணவு முடிந்ததும் 11 மணி ப்ரேக் டைமில் வெள்ளரிக்காய் அல்லது மாலை நேர ஸ்நாக்ஸ் டைம்ல வெள்ளரிக்காய் சாப்பிடலாம். அது மிகவும் நல்லது.உங்களை நீண்ட நேரத்திற்கு ஃபுல்லான உணர்வை தரும்.
வெள்ளரிக்காயில் குறைந்த கலோரி இருப்பதால் நீங்கள் நினைத்த நேரத்தில் சாப்பிடலாம். நல்ல ஸ்நாக்ஸ் ஆப்சன்.
வெள்ளரிக்காய் புத்துணர்ச்சி தரும் ஒன்றாக இருக்கும். இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கும் பண்புகளை பெற்றுள்ளது. இது உங்களுக்கு கலோரியையும் அதிகரிக்காது. ஆனால், சுவையான ஒன்றாகவும் இருக்கும். தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருக்க உதவும். உடலின் வளர்சிதை மாற்றம் சரியாக இருந்தாலே குடல் ஆரோக்கியம், உணவு செரிமானம் எல்லாம் சீராக இருக்கும்.
வெள்ளரிக்காய் தண்ணீர் தயாரிப்பது மிகவும் எளிதானது. ஃப்ரெஷ்சான வெள்ளரிக்காயை நன்றாக தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். இதை குடிக்கும் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கழித்து குடிக்க வேண்டும். வெள்ளரிக்காயின் எசன்ஸ் தண்ணீரில் சேர்ந்திருக்கும். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து ஜில்லுன்னு குடிக்கலாம்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் தண்ணீரை குடிக்கலாம். அடிக்கடி குடித்தாலும் அளவுடன் குடிக்க வேண்டும். இது நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும். அளவோடு குடிக்க வேண்டும்.