ஆம்புலன்ஸ் ஸ்ட்ரக்சரில் சிக்கிய இளைஞரின் தலை... திக் திக் நிமிடங்கள் - என்ன நடந்தது?
விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்து வந்த நிலையில் ஆம்புலன்ஸில் இருந்த ஸ்ட்ரக்சரில் மாணவரின் தலை சிக்கிய சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்து வந்த நிலையில் ஆம்புலன்ஸில் இருந்த ஸ்ட்ரக்சரில் மாணவரின் தலை சிக்கியதை அடுத்து ஒருமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள் மாணவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய மாணவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா எலந்தகுடியைச் சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர்களான 19 வயதான முகமது சாஜித் மற்றும் அவரது நண்பர் 19 வயதான முகமது ரியாம். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நல்லாத்தூர் சென்று விட்டு காரைக்காலில் மது அருந்திவிட்டு மதுபோதையில் ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை காரைக்கால் மாவட்ட எல்லையான நல்லாடை காவல் சோதனை சாவடி அருகே திருப்பத்தில் இருசக்கர வாகனம் திரும்பிய போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
ஸ்ட்ரக்சரில் சிக்கிய தலை
அதனை கண்ட அருகில் இருந்த நல்லாடை காவல் சோதனை சாவடி போலீசார் மற்றும் பொதுமக்கள் இருவரையும் மீட்டு நல்லாடை தனியார் சமூக நல அறக்கட்டளை இலவச ஆம்புலன்ஸில் ஏற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆம்புலன்ஸை நல்லாடையைச் சேர்ந்த ஓட்டுநர் ராகவன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். ஆம்புலன்ஸில் முகமது ரியாம். ஸ்ட்ரக்சரிலும், முகமது சாஜித் அமர்ந்தும் வந்துள்ளனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை உள்ளே வந்த ஆம்புலன்ஸ், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு பகுதிக்கு திரும்பிய போது ஆம்புலன்ஸில் இருந்த முகமது சாஜித் கீழே சாய்ந்து முகமது ரியாம் படுக்க வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ரெக்சர் அடியில் தலை சிக்கிக் கொண்டது. முகமது சாஜித் தலை ஸ்ட்ரக்சருக்கு அடியில் நன்றாக சிக்கி கொண்டதால் தலையை எடுக்க முடியாமல் கதறியுள்ளார்.
பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்
இதனை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் பலனளிக்காதாதால் மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர். போராடி ஸ்ட்ரக்சரை கட் செய்து முகமது சாஜித்தை பத்திரமாக மீட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் இருவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸில் ஸ்ட்ரக்சர் அடியில் சிக்கிய மாணவனை சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.