Justin Trudeau : கட்சிக்குள் கிளம்பிய எதிர்ப்பு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா.. பின்னணி என்ன?
Justin Trudeau : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் மற்றும் லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார்.
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ:
கனடா பிரதமராக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் ஜஸ்டின் ட்ரூடோ, 9 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்து வருவதால் அவரது சொந்த கட்சிக்குள்ளேயே பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. மேலும், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர லிபரல் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் முடிவு செய்தனர்.
கனடாவில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, விலைவாசி உயர்வு மற்றும் மற்ற நாடுகள் உடனான வர்த்தக கொள்கையில் நிலவும் குழப்பம காரணமாக ட்ரூடோ மீதான அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. மேலும் அங்கு வருக் அக்டோபர் மாதம் பிரதமர் தேர்தல் நடைப்பெற உள்ளது, இதற்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் ட்ரூடோவுக்கு மக்கள் மீது இருந்த செல்வாக்கானது குறைந்தது. இதனால் சொந்தக்கட்சிக்குள் ட்ரூடோவுக்கு போர்க்கொடி கிளம்பியது.
பிற நாடுகளுடன் முரண்பாடு:
ட்ரூடோ பிற நாடுகளுடன் முரண்பாடான நிலையை வைத்திருந்தார். குறிப்பாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியா - கனடா உறவு தூதரக ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை ஜஸ்டின் கையாண்ட விதம் கடும் எதிர்ப்புகளை பெற்றது. இந்தியாவுக்கு எதிராக உறுதியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் இந்தியாவை குற்றம் சாட்டியதால், அவருக்கு சொந்த கட்சியிலும் எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கின.
கூட்டணி கட்சி எதிர்ப்பு:
சர்வதேச நாடுகளுடனான உறவு பாதிப்பு ஒருபக்கம் என்றால் அரசியல் ரீதியாகவும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியாக உள்ள தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், ட்ருடோவிற்கு எதிராக திரும்பினார். ட்ரூடோ அரசு மீது வரும் 27-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.
இதையும் படிங்க: HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
ட்ரூடோ ராஜினாமா:
இந்த நிலையில் ஒன்பது ஆண்டுகள் பதவியில் இருந்த ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தார். கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும், லிபரல்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை ட்ரூடோ பிரதமராக பதவி வகிப்பார். ஒட்டாவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியானது.
தனது ராஜினாமா குறித்து ட்ரூடோ பேசியதாவது: "நான் ஒரு போராளி. என் உடலில் உள்ள ஒவ்வொரு எலும்பும் எப்பொழுதும் சண்டையிடச் சொன்னது, ஏனென்றால் நான் கனடா மக்கள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன், நான் இந்த நாட்டைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன், மேலும் மக்களின் நலனுக்காக நான் எப்போதும் ஊக்கமளிப்பேன்" என்று ட்ரூடோ கூறினார்.
#WATCH | "...I intend to resign as party leader, as Prime Minister after the party selects its next leader...Last night I asked the president of the Liberal Party to start that process..," says Canadian PM Justin Trudeau.
— ANI (@ANI) January 6, 2025
"...I am a fighter. Every bone in my body has always… pic.twitter.com/Cvih6YJCzP
மேலும் பேசிய அவர், "விடுமுறை நாட்களில், எங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும், எனது குடும்பத்தினருடன் நீண்ட நேரம் பேசவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததுள்ளது. நேற்றிரவு இரவு உணவின் போது நான் ராஜினாமா முடிவைப் பற்றி என் குழந்தைகளிடம் கூறினேன். கட்சி அடுத்த தலைவரை தேர்ந்தெடுத்த பிறகு பிரதமர் பதவியிலிருந்த்ய் விலகுவேன் என்றும் தற்போது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். புதிய தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு லிபரல் கட்சியின் தலைவகளிடம் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.”
நான் சரியான தேர்வில்லை:
வரவிருக்கும் தேர்தலைப் பற்றி பேசுகையில், "இந்த நாடு அடுத்த தேர்தலில் உண்மையான தேர்வுக்கு தகுதியானது, மேலும் நான் கட்சியின் உள் சண்டைகளை எதிர்கொள்கிறேன் என்பது எனக்கு தெளிவாகிவிட்டது, அந்த தேர்தலில் நான் சிறந்த தேர்வாக இருக்க முடியாது" என்று அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் சாடல்:
ட்ரூடோவின் ராஜினாமா அறிவிப்புக்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவரான பியர் பொய்லிவ்ரே " எந்த இரு மாற்றமும் இல்லை, ஒவ்வொரு லிபரல் எம்.பி. மற்றும் தலைமை போட்டியாளர்களும் 9 ஆண்டுகளாக ட்ரூடோ செய்த அனைத்தையும் ஆதரித்தனர்.
Nothing has changed.
— Pierre Poilievre (@PierrePoilievre) January 6, 2025
Every Liberal MP and Leadership contender supported EVERYTHING Trudeau did for 9 years, and now they want to trick voters by swapping in another Liberal face to keep ripping off Canadians for another 4 years, just like Justin.
The only way to fix what… pic.twitter.com/YnNYANTs1y
இப்போது அவர்கள் ஜஸ்டினைப் போலவே மக்களை இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஏமாற்ற மற்றொரு முகத்தை மாற்றிக் கொண்டு வந்து வாக்காளர்களை ஏமாற்ற விரும்புகிறார்கள்" என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.