சீர்காழியில் போதைக்கு எதிராக சிலம்பம் சுழற்றிய மாணவர்கள்...!
தமிழர்களின் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் வகையிலும் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடங்கும் சீர்காழியில் கலை சங்கம் திருவிழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழர்களின் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் வகையில் கலை சங்கம் திருவிழா நடைபெற்றது.
அழிந்து வரும் பாரம்பரிய கலைகள்
தற்போது நவநாகரீக காலத்தில் பாரம்பரிய கலைகள் அனைத்தும் அழிந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக தன்னார்வலர்களும், கலை ஆர்வலர்களும் என பலரும், இதற்கான பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதுபோன்ற ஒரு நிகழ்வை சீர்காழியில் சிலம்பாட்ட சங்கத்தினர் நடத்தியுள்ளனர்.

இளைய வீரத்தமிழர் சிலம்பாட்ட சங்கம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இளைய வீரத்தமிழர் சிலம்பாட்ட சங்கம் நடத்தும் தமிழ்நாடு பாரம்பரிய கலைகளுக்கான 2 மணி நேர மாபெரும் உலக சாதனை மற்றும் கலை சங்கம் திருவிழா 2025 நடைபெற்றது. இதில் இளைய தலைமுறையினர், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சிலம்பம், பரதம், யோகா, சாமியாட்டம், பறை இசை ஆட்டம், பொய்க்கால் குதிரை, கிராமிய நடனம், பொம்மலாட்டம் மற்றும் இரண்டு மணி நேர தொடர் சிலம்பம் சுற்றி போட்டி நடைபெற்றது.
திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்ட் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த மாணவர்கள்
சீர்காழியில் தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வில், கோயமுத்தூர், சேலம், சென்னை, பாண்டிச்சேரி, மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளில் இருந்து 300 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இடைவிடாது இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினார். இந்நிகழ்வில் 5 வயது சிறுவர்கள் முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் வரை ஆர்வமுடன் பங்கேற்று உற்சாகத்துடன் சிலம்பாட்டத்தில் பங்கேற்றனர்.

பொருள் தடுப்பு விழிப்புணர்
மேலும், சினிமா பாடல்களுக்கு ஏற்ப ஆர்வத்துடன் சிலம்பம் சுற்றிய மாணவர்களில் சிலர் பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி கொண்டும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இளைய தலைமுறை போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி இத்தகையை முயற்சியை கையில் எடுத்துள்ளதாக கூறியுள்ள சிலம்பாட்டம் பயிற்றுவிக்கும் குழுவினர், சிலம்பாட்டம் கற்றுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்றும் இதன் மூலம் இளைய தலைமுறையினர் தவறான வழிகளில் செல்லாமல் இருக்க முடியும் என தெரிவித்தனர்.






















