மேலும் அறிய

திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்ட் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் உண்மை தொண்டனுக்கு ஓர் வேண்டுகோள் என மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் திமுக நிர்வாகி

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் 35 வயதான எழில்அரசன். திமுக நிர்வாகியான இவர், கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த பிப்ரவரி 4 -ம் தேதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், சேலம் மத்திய மாவட்ட திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஒன்றியப் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்த நான், கீழ்காணும் காரணங்களால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்கிறேன்.


திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்ட் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!

இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாது

திமுக ஆட்சியில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

விளக்கம் அளித்த நிர்வாகி 

இதுகுறித்து தமிழ் செய்தித்தாளுக்கு அவர் கூறுகையில், 2015-ம் ஆண்டில் இருந்து கட்சியில் இருந்து வருகிறேன். அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்தேன். கட்சியில் நிலவும் உட்கட்சிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு பலமுறை திமுக நிர்வாகிகளிடம் வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியில் இருந்து என்னை நீக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் கூட, எனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கவில்லை. கட்சியில் இருந்து என்னை நீக்கவும் இல்லை.


திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்ட் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!

மூத்த தலைவர்கள் எ.வ.வேலு, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உள்ள நிலையில், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த உதயநிதி திடீரென இளைஞரணிச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் என குறுகிய காலத்துக்குள் உயர்ந்த பொறுப்புக்கு வந்துவிட்டார். பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. தற்போது இன்பநிதிக்கு வெளிப்படையாக கொடுக்கும் முக்கியத்துவம், என்னைப் போன்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு

மதுரையில் ஜல்லிகட்டுப் போட்டியின்போது, ஆட்சியரை அலட்சியப்படுத்தியதைக் கண்டு வருந்தினேன். வருங்காலத்தில் இன்பநிதிக்காகவும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று கருதும்போது வேதனை ஏற்படுகிறது. எனவேதான், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளேன். பலரும் அடுத்தடுத்து விலகுவார்கள். குறிப்பாக, கிராமங்களில் இருந்து பலர் விலகுவர்,  இவ்வாறு அவர் கூறியிருந்தார்.


திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்ட் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!

மயிலாடுதுறை பாஜகவினர் போஸ்டர் 

இந்நிலையில், அதனைக் குறிப்பிட்டு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில்பாலு மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோரின் புகைப்படங்களுடன் பாஜக சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், "திமுகவின் உண்மை தொண்டனுக்கு ஒரு வேண்டுகோள்!" உதயநிதிக்கு பிறகு இன்பநிதிக்காகவும் பணிபுரிய வேண்டியிருக்கும் என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக திமுக நிர்வாகி அறிவிப்பு. உண்மையான திமுக தோழர்களே ! தொண்டர்களே ! நீங்கள் எப்போது? வாரிசு அரசியல் இல்லாமல் யாரும் கட்சியின் எந்த உயர் பொறுப்புக்கும் வரலாம் என்ற உறுதிப்பாடுள்ள தமிழையும், திருக்குறளையும் உலகில் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லும் பச்சைத்தமிழன் நரேந்திர மோடி, மக்கள் தலைவன் அண்ணாமலையின் தலைமையில் ஏற்க வரவேற்கிறோம். பாஜகவில் இணைவீர் தொடர்புக்கு 9443008128, 9443112031, என்ற இரண்டு தொலைபேசி எண்களையும் பதிவிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது திமுகவினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Embed widget