”நாங்கள் முடிவெடுத்தால் நாடு அழிந்துவிடும் ” அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்...!
சீர்காழி அருகே பல்வேறு கோரிக்கைகளுடன் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் கிராமத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி சென்றனர்.
டிராக்டர் பேரணிக்கு அழைப்பு
நாடு முழுவதும் 26 ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தன்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா எனும் விவசாயிகளுக்கான அமைப்பு மேலும், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் டிராக்டர் பேரணிக்கு விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
காலவரையற்ற உண்ணாவிரதம்
மேலும் வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெக்ஜித் சிங் தால்லேவாலின் உடல்நிலை மோசமடைந்ததுள்ள நிலையில் மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேச வேண்டும் என இந்த டிராக்டர் பேரணி நடைபெறுகிறது.
ஆச்சாள்புரத்தில் டிராக்டர் பேரணி
நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் ஆச்சாள்புரத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலையில் நடைபெற்ற இந்த பேரணியில் மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம், தஞ்சை காவிரி ஒருங்கிணைப்பு குழு வேட்டங்குடி சீனிவாசன், மாவட்ட தலைவர் வைத்தியநாதன், மாவட்ட பொருளாளர் முருகேசன், துணை செயலாளர் சம்பந்தம், வைத்தீஸ்வரன் கோயில் தலைவர் செல்வராஜ், ஒருங்கிணைப்பு குழு தலைவர் கோபி உள்ளிட்ட சீர்காழி தாலுக்காவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் டிராக்டருடன் கலந்து கொண்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணையாக சென்றனர்.
இதையும் படிங்க: அரிட்டாபட்டியில் கால்வைக்கும் ஸ்டாலின்: 11, 608 பேர் மீதான வழக்குகள் வாபஸ்.!
இப்பேரணியில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும், வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் விவசாய ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்து விவசாயிகளை தற்கொலையிலிருந்து காக்க வேண்டும், காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள முறைகேடுகளை களைந்து விவசாயிகளுக்கு முழுமையாக காப்பீட்டு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
விவசாயிகள் எச்சரிக்கை
மேலும் விவசாயிகள் கூறுகையில், காப்பீடு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளை காப்பதாக கூறி மத்திய அரசு காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தது, ஆனால் அந்த காப்பீட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. 1750 கோடி ரூபாயை மாநில அரசும், மத்திய அரசு 1750 கோடியும், விவசாயிகள் 250 கோடி பிரிமியம் தொகையை கட்டுகிறோம். இந்த எல்லா பணத்தையும் பெற்றுக்கொண்டு, விவசாயிகள் கட்டிய 250 கோடி ரூபாயில் மட்டுமே காப்பீடு நிறுவனங்கள் நிவாரணம் வழங்குகிறது. இதனை வழிநடத்தும் வேண்டிய மாநில மத்திய அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இதையும் படிங்க: Purisai Kannappa sambandan: வென்ற தெருக்கூத்து கலைஞர்கள்.. கிடைத்த பத்மஸ்ரீ! யார் இந்த புரிசை கண்ணப்ப சம்பந்தன் ?
ஆந்திர கர்நாடக போன்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு நேரடியாக ஊக்க தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. சமிபத்தில் பெய்த மழையால் விவசாயிகள் பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். நெல்லின் ஈரப்பதத்தை அறிய குழுவை அனுப்பும் மத்திய அரசு அழிந்து கிடக்கும் விவசாயத்தை பார்ப்பதற்கே அதற்கான காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டு தொகையை வழங்க வலியுத்த மத்திய மாநில அரசுகள் இல்லை, இந்த நிலமை ஆண்டுதோறும் தொடர்கிறது.
இதே நிலை நீடித்தால் விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி எங்களுக்கான உணவிற்கு மட்டுமான சாகுபடியை செய்வதென்றும், அதிக சாகுபடி செய்து அரசுக்கு தர போவதில்லை என முடிவு செய்துள்ளோம். அவ்வாறு செய்தால் அரசு எங்களை திரும்ப பார்க்கும் நிலை உருவாகும், ஒருமுறை நாங்கள் சாகுபடியை நிறுத்தினால் நாடு மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

