ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்திய Scram 440 பைக் பற்றிய தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
Royal Enfield நிறுவனம் தன் Scram 440-யை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.
Scram 411-ன் மேம்படுத்திய பதிப்பாக Scram 440 இருக்கிறது.
Scram 440 மேம்படுத்தப்பட்ட 443 cc காற்று குளிரூட்டப்பட்ட என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
இது 24.5Bhp மற்றும் 34Nm அதிகபட்ச டார்க்கை வெளியிடுகிறது. Scram 411-யை விட 6.5 சதவீதம் கூடுதல் டார்க்கை வழங்குகிறது.
6-வேக கியர்பாக்ஸ் உடன் இருக்கும் இந்த மாடல், சுமூகமான பயணம், குறைந்த அதிர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
புதிய LED ஹெட்லேம்ப், மாறக்கூடிய ஏபிஎஸ் மற்றும் டிரிப்பர் நேவிகேஷன் ஆகியவற்றை வழங்குகிறது.
வண்டியின் ப்ரேக் 300mm முன் டிஸ்க் மற்றும் 240mm பின் டிஸ்க் மேம்படுத்தப்பட்ட நிறுத்தும் சக்தியை அளிக்கிறது.
ட்ரையல் வேரியண்ட் ரூ.2.08 லட்சத்திற்கும் ஃபோர்ஸ் வேரியண்ட் ரூ.2.15 லட்சத்திற்கும் விற்பனைக்கு வந்துள்ளது.