Dr Radhakrishnan Award: மயிலாடுதுறை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் இவர்கள்தான்..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு கெளரவத்துள்ளது.
இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறு ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ளது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது 386 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. நம்நாட்டில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆசிரியர் பணியை அறப்பணி என்பதற்கு ஏற்ப மாணவர்களின் நலனின் அக்கறை கொண்டு செயல்பட்ட சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து, ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது.
10,000 ரூபாய் ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்
இந்த விருது பெறும் ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாய் ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்திருந்தது. அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 16 முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. அதனை அடுத்து தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் வலைதளமான எமிஸ் தளம் வழியாக ஏராளமான ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் சார்ந்த தங்களது செயல்பாடு குறித்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்தனர்.
ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு
அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவித்தது தமிழ்நாடு அரசு கெளரவ படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்ககத்தை சார்ந்த மூன்று ஆசிரியர்கள்:
1. கலைச்செல்வன் - தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, நாகூர்.
2. துளசிரங்கன் - பட்டதாரி உதவி ஆசிரியர், சபாநாயகர் முதலியார் இந்து அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, சீர்காழி.
3. மணிமேகலை- தலைமை ஆசிரியர், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, ஆக்கூர்.
தொடக்கக் கல்வி இயக்ககத்தை சார்ந்த மூன்று ஆசிரியர்கள்
1. மூர்த்தி - தலைமை ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி, அகர பெருந்தோட்டம்.
2.மேகலா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீராநல்லூர்.
3. வரதராஜன் - இடைநிலை ஆசிரியர், ஸ்ரீ காமாட்சி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கன்னியாநத்தம்.
ஆகிய ஆறு ஆசிரியர்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.