மேலும் அறிய

மயிலாடுதுறையில் ராமர் துதி பாடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ராம ராஜ்ஜியத்தை நோக்கி நம் பாரதம் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கம்பரின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்பது அவசியமாகிறது என கம்பர் கோட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரிழந்தூர் கிராமத்தில் கம்பர் பெயரில் கம்பர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு  தஞ்சை கோட்ட ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அயோத்தி ராமனும்! தமிழ் கம்பனும்!! என்ற கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முன்னதாக தேரழந்தூரில் கம்பர் கோட்டத்தில் அமைந்துள்ள கம்பரின் முழு உருவ சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மயிலாடுதுறையில் ராமர் துதி பாடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தொடர்ந்து கம்பரின் பெருமைகளை நிலை நிறுத்த தொடர்ந்து செயலாற்றி வரும் பல்வேறு நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். மாணவ, மாணவிகளின் கம்பராமாயணத்தின் பாராயணம் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறுகையில், ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என உரக்க செல்லி தனது பேச்சை துவங்கிய ஆளுநர் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறினார். மேலும் தொடர்ந்து பேசுகையில் பாரதம் முழுவதும் ராம மயம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ராமனின் அதிதீவிர பக்தர் ஆன கம்பன் பிறந்த மண்ணில் பேசுவதை பாக்கியமாக கருதுகிறேன். 

மயிலாடுதுறையில் ராமர் துதி பாடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பழமைவாய்ந்த தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, அகநானூறு அனைத்திலும் ராமரின் புகழ் ஒலித்துக் கொண்டே உள்ளது. தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. நமது அரசியல் அமைப்பு அடிநாதம் ராம ராஜ்ய தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. நாம் ராம ராஜ்யத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கம்பரை பெருமைப்படுத்த ராமராஜ்யம் அவசியமானது. ராமரை தெரிந்து கொள்ளும் வகையில் கம்பராமாயணத்தை முதலில் தமிழில்  அழகாக எடுத்துரைத்ததன் மூலம் சாதாரண மனிதன் மனதிலும் ராமர் பற்றிய எண்ணம் சென்றடைந்தது. அதனால் தான் பல்வேறு மொழிகளில் கம்பராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டது.

மயிலாடுதுறையில் ராமர் துதி பாடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

நம் பாரத தேசம் அரசியலமைப்புகளை தாங்கிய நாடு அல்ல, பாரதம் என்பது ஒரே குடும்பம் இங்கு பல்வேறு மொழி கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் கொண்ட மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதற்கு அடிப்படை ராமன்தான். ராம ராஜ்ஜியத்தை நோக்கி நம் பாரதம் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கம்பரின் பெருமையை நிலைநாட்டுவது அவசியமாகிறது. பாரதத்தின் ஆன்மா ஸ்ரீராமர் என்றும் கம்பரின் புகழை உயர்த்திப் பிடிப்போம் என்றார்.

மயிலாடுதுறையில் ராமர் துதி பாடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

முன்னதாக இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் உள்ளிட்டோர் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கருப்பு கொடி காட்ட திரண்டனர். அவர்களை ஆளுநர் செல்லும் வழி இருந்து நூறு மீட்டர் தொலைவில் பேரிகாட் கொண்டு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இருந்தாலும் கவர்னரின் வாகனம் சாலையை கடக்கும் போது காவல்துறையினர் மீறி அவர்கள் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அதனைத் தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் கவர்னர் செல்லும் வழியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த அனைத்து முறையும் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget